சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மிக எளிய முறை

sanibagavaan

நம்மில் பலருக்கு சனிபகவான் என்றாலே ஒரு வித அச்சம் உண்டாகும். அதற்கு காரணம் அவர் நமக்கு கொடுக்கும் கடுமையான தண்டனைகள் தான். அதிலும் ஏழரை சனியின் பிடியில் இருபர்களுக்கு இது ஒரு மன நோய் போல் ஆகிவிடும். சனிபகவானின் உக்கிரத்தை குறைப்பதற்கு மிக எளிய ஒரு வழி உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

ஏழரை சனியின் பிடியில் இருப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை பிடித்துகொண்டாள் போதும் சனியின் தாக்கம் தானாக குறைய ஆரமிக்கும். இதற்கான காரணத்தை அறிந்துகொள்ள நாம் ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

இலங்கைக்கு பாலம் அமைக்கும் வேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது சனி பகவான் வந்தார். “ஆஞ்சநேயா உன்னை நான் இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும் ஆகையால் உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு நான் இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார் சனிபகவான்.

நான் என் கடமையை செய்துகொண்டிருக்கும்போது நீங்கள் வந்து தொந்தரவு செய்வது தவறு என்றார் அனுமன். அனால் உன்னை இரண்டரை மணி நேரம்  என் பிடியில் வைத்திருப்பதே என் கடமை என்றார் சனிபகவான். அப்படியா சரி, என் தலையில் அமர்ந்துகொள்ளுங்கள் என்றார் ஆஞ்சநேயர்.

- Advertisement -

சனி பகவானும் ஏறி தலையில் அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் சனிபகவான் அலறினார். “சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். மிகுந்த வலியால் துடித்துப்போன சனிபகவான் இரண்டரை மணிநேரம் கழித்தே தலையில் இருந்து இறங்கினார்.

அன்று முதல் “ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார் சனீஸ்வரன். ஆகையால் ஆஞ்சநேயரை மனதார வேண்டினால் போதும் சனியின் தாக்கம் தானாக குறையும்.

ஆஞ்சநேயரை வழிபடும் முறைகளில் சில

– வடைமாலை சாத்துதல்
– செந்தூரக்காப்பு அணிவித்தல்
– வெண்ணெய் காப்பு சாத்துதல்
– ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்