சனி பெயர்ச்சியால் ஏற்படும் இன்னல்கள் தீர

Sani peyarchi pariharam in Tamil
- Advertisement -

கிரகப் பெயர்ச்சிகளில் அனைவராலும் மிகவும் ஆவலாக கவனிக்கப்படும் கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஆகும். ஒவ்வொரு ராசியிலும் குறைந்தது இரண்டரை ஆண்டு காலம் சனி பகவான் தங்கி, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். கிரகப் பயிற்சிகளில் மிக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் பெயர்ச்சி சனி கிரக பெயர்ச்சி தான். பாவ கிரகமான சனி பகவானின் ஒவ்வொரு பெயர்ச்சிக் காலத்தின் போதும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும் சூழல் உருவாகும்.

கர்ம வினைக்கேற்ப சனி பகவான் கொடுக்கின்ற தண்டனையில் இருந்து யாருமே தப்ப முடியாது என்பது ஜோதிட உண்மை. இருந்தாலும் அவரின் பெயர்ச்சி காலத்தில் வாழ்வில் மிகக் கடுமையான துன்பங்களை அனுபவிக்காமல், சனி பகவானின் மனதை குளிரச் செய்து நமது வாழ்வில் நற்பலன்களை பெற உதவும் சில எளிய சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சனி பெயர்ச்சி பரிகாரம்

பொதுவாக சனி பெயர்ச்சி நடைபெறும் பொழுது சனி பகவானுக்கு என பிரத்யேக திருக்கோயிலாக இருக்கின்ற திருநள்ளார் அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் – பூண்முலையால் சமித திருக்கோயிலுக்கு சென்று சிவபெருமானையும், அம்பாளையும் வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அங்கு தனி சன்னதியில் இருக்கின்ற சனீஸ்வர பகவானை முறைப்படி பூஜைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த சனீஸ்வர வழிபாடு பரிகாரம் செய்வதால் தங்களுக்கேற்பட்டிருக்கின்ற எந்த வகை சனிப்பெயர்ச்சியாக இருந்தாலும் அப்பெயர்ச்சி காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் தடுத்து சனீஸ்வர பகவான் அருள் புரிவோர்.

சனிபகவான் பெயர்ச்சி காரணமாக தங்கள் ராசிக்கு பாதகமான பலன்கள் ஏற்பட இருப்பதாக தாங்கள் கருதினால், அந்த தோஷம் நீங்க கருப்பு உளுந்து, கருப்பு போர்வை, கருப்பு நிற காலணிகள், கருப்பு நிற குடை போன்றவற்றை வறிய நிலையில் இருப்பவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். மேலும் இந்த தானத்தை சனிக்கிழமைகளில் சனி ஓரை நேரத்தில் செய்ய வேண்டும். சனி பகவானுக்குரிய நட்சத்திரங்களான “பூசம், அனுஷம், உத்திரட்டாதி” ஆகிய நட்சத்திர தினங்களிலும் மேற்சொன்ன பொருட்களை தானம் அளிப்பதாலும் சனிப்பெயர்ச்சியால் கெடு பலன்கள் ஏதும் ஏற்படாது.

- Advertisement -

ஆன்மீகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சனிபகவான் யந்த்ரம் விற்பார்கள். இந்த சனி பகவான் யந்திரத்தை சனிப்பெயர்ச்சி காரணமாக பாதகமான பலன்களை சந்திக்க இருக்கின்ற ராசியினர் மட்டும் இந்த சனி பகவான் யந்த்ரத்தை வாங்கி வந்து வீட்டின் பூஜையறையில் வைத்து. தினமும் அந்த யந்திரத்துக்கு புஷ்பங்கள் சாற்றி, தீப தூப ஆராதனைகள் செய்து வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும். கெடு பலன்களை தரக்கூடிய சனிப்பெயர்ச்சி காலம் முடிந்த பிறகு இந்த சனி பகவான் யந்திரத்தை ஏதேனும் நீர் நிலைகளில் விட்டு விட வேண்டும்.

அதே போன்று சனிக்கிழமைகள் தோறும் விநாயகர் பெருமான் கோவிலுக்கு சென்று விநாயகர் தீபம் ஏற்றி, தோப்புக்கரணம் போட்டு வழிபாடு செய்து வந்தாலும், சனி பெயர்ச்சி காலத்தில் கெடுப்பலன்கள் ஏதும் ஏற்படாது. மேலும் கோயில் யானைகளுக்கு பழங்களை உண்ணக் கொடுப்பதாலும் தங்களுக்கு ஏற்படுகின்ற சனிதோஷத்தால் கெடுதல்கள் ஏற்படாமல் தடுக்கின்ற ஒரு சிறந்த பரிகாரமாக உள்ளது.

இதையும் படிக்கலாமே: சிறந்த வேலை கிடைக்க பரிகாரம்

புராணங்களின்படி சனி பகவானால் பிடிக்க முடியாத இரண்டே தெய்வங்கள் என கருதப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகப் பெருமான் ஆவார்கள். ஆஞ்சநேயரின் வடிவாக இருக்கின்ற குரங்குகளுக்கு கருப்பு நிறத்தில் இருக்கின்ற நாவல் பழங்களை உண்ண கொடுப்பதால் தங்களுக்கு சனிப்பெயர்ச்சி காலத்தில் எத்தகைய கெடுபலன்களும் ஏற்படாமல் ஆஞ்சநேயர் காத்தருள்வார்.

- Advertisement -