சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

pillaiyar2
- Advertisement -

பொதுவாகவே சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. அதிலும் இந்த ஆங்கில வருடத்தின் கடைசி சங்கடஹர சதுர்த்தியானது நாளை வரவிருக்கிறது. இது தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி. இந்த தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியில், நாம் விநாயகர் வழிபாடு செய்தால் நம் கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து, காணாமல் போய்விடும்.

சனிக்கிழமையோடு இந்த சங்கடஹர சதுர்த்தி சேர்ந்து வந்திருப்பதால், சனி பகவான் பிடியிலிருந்து தப்பிக்கவும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளைய தினம் 30-12-2023 சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டை எப்படி மேற்கொள்ளலாம். ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து குடித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்குங்கள். விரதம் இருப்பது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பொறுத்தது. சாப்பிடாமல் விரதம் இருப்பதா ஒருவேளை சாப்பிட்டு விரதம் இருப்பதா, பால் பழம் சாப்பிட்டு விரும்பதம் இருப்பதா என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

காலையில் ‘ஓம் விக்ணங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லி விரதத்தை தொடங்குங்கள். சங்கடஹர சதுர்த்தி என்றாலே மாலை நேரம்தான் சிறப்பு அல்லவா. மாலை உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளையாருக்கு கட்டாயமாக அருகம்புல் மாலை வாங்கி போட்டு, விளக்கு ஏற்றி தீப தூப ஆராதனை காட்டி விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். 6 மணிக்கு மேலாக வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு போங்க.

- Advertisement -

உங்கள் கையால் சிவப்பு நிறத்தில் இருக்கும் பூ, அருகம்புல் வாங்கி, பிள்ளையாருக்கு கொடுங்கள். அருகம்புல்லை வாங்கி உங்கள் கையால் கட்டி, பிள்ளையாருக்கு மாலை போட்டால், எவ்வளவு பெரிய கிரக தோஷமும் விலகும். கூடவே, சேர்த்து சனி தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்து விடுங்கள். விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். தோப்புக்கரணம் போட வேண்டும்.

சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து விநாயகரை நினைத்து சங்கடங்களை எல்லாம் தீர்த்து வையப்பா ஆனை முகத்தானே என்று வேண்டுதல் வைத்து, வீடு திரும்பங்கள். மாலை உங்களுடைய விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் கையால் இன்று அருகம்புல்லை மட்டும் பிள்ளையாருக்கு வாங்கி கொடுக்க மறக்காதீங்க.

இதையும் படிக்கலாமே: சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

அதிலும் சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி நாளை யாரும் தவற விடாதீங்க. விநாயகரை பாதங்களை பற்றி கொண்டவருக்கு நிச்சயம் காரியத்தடை இருக்காது. கிரக தோஷங்கள் விலகும். வாழ்வில் மேலும் மேலும் முன்னேற்றம் வரும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -