சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

vinayagar pary lady
- Advertisement -

நம்முடைய தெய்வ வழிபாட்டு முறையில் ஒவ்வொரு தெய்வங்களுக்கு ஒவ்வொரு நாள்கள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் விநாயகருக்கு சதுர்த்தி இதில் மிகவும் விசேஷமானது. அதிலும் இந்த சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் அருள் தரக் கூடியதாகவும் இருக்கும். அத்தகைய சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

தெய்வங்களிலே மிகவும் எளிமையானவர் என்றால் அவர் விநாயகர் பெருமான் தான். எளியவரும் வலியவரும் தன்னை நாடி வர துன்பப்பட கூடாது என்பதற்காக அவர்களை நாடி காணும் இடமெங்கும் நிறைந்திருப்பவர் தான் இந்த விநாயகர். இத்தகைய விநாயகரை வழிபடும் முறையும் மிகவும் எளிமையானதாகவே இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் சங்கட சதுர்த்தி நாளில் விநாயகரை நாம் இந்த முறையில் வழிபடும் போது நம்முடைய சங்கடங்கள் தேர்வதோடு செல்வ செழிப்புடன் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டையும் வழிபாட்டின் போது சொல்லக் கூடிய பாடலின் வரிகள் பற்றியும் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

சங்கட சதுர்த்தி நாளில் பலரும் விரதம் இருந்து விநாயகரை வழிபடுபவர்கள். அப்படி இருப்பவர்கள் தாராளமாக இருக்கலாம் விரதம் இருக்க முடியாதவர்கள் அசைவ உணவை தவிர்த்து எளிமையான உணவை உண்டு விரதம் இருக்கலாம். இந்த நாளில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்து விரதத்தை தொடங்கி விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு மாலை உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடக்கும் அந்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள். முடியாதவர்கள் வீட்டிலேயே கூட எளிமையான முறையில் வழிபடலாம். இந்த வழிபாட்டிற்கு வீட்டில் இருக்கும் விநாயகர் படம் அல்லது சிலைக்கு கட்டாயமாக அருகம்புல் மாலை போடுங்கள்.

வெள்ளருக்கம் விநாயகர் இருந்தால் அவருக்கு மட்டும் சிகப்பு நிறத்தில் வாசனை மலர்களை மாலையாக கட்டி சுட வேண்டும். இது நம்முடைய வாழ்வில் செல்வ வளங்களையும் சந்தோஷத்தையும் நிம்மதியும் தேடித் தருவதாக அமையும். இத்துடன் நெய்வேதியமாக உங்களால் செய்ய முடிந்த எளிமையான ஒன்றை செய்து வையுங்கள் அதுவே போதும்.

- Advertisement -

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

 

என்ற விநாயகரின் இந்த துதி பாடலை மூன்று முறை பாட வேண்டும். இதை வீட்டில் வழிபாடு செய்பவர்கள் விநாயகர் படத்திற்கு முன்பு அல்லது விநாயகர் சிலைக்கு முன்பாக அமர்ந்து பாடலாம். கோவில்களில் சென்று வழிபாடு செய்பவர்கள் அங்கும் இந்த பாடலை பாடலாம்.

இதையும் படிக்கலாமே: ஏழ்மை நீங்க லட்சுமி அஷ்டோத்திர நாமாவளி வழிபாடு

பாடலுடன் கூடிய எளிய எந்த ஒரு வழிபாடு போதும்போதும், விநாயகரின் அருளை பரிபூரணமாக உங்களுக்குப் பெற்றுத் தருவதோடு எல்லா வகை செல்வங்களையும் வாரி வழங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -