சனி தோஷத்தைப் போக்கும் மந்திரம்

1310
sani bagavaan temple
- விளம்பரம் -

“சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை” “சனியைப் போல் கெடுப்பாருமில்லை” என்று ஒரு புகழ்பெற்ற ஜோதிடப் பழமொழி உண்டு. ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லையென்று முற்போக்கு சிந்தனைக் கருத்துக்கள் பேசுவோரும் கூட சனிக் கிரகப் பெயர்ச்சியால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை, பலன்களை ரகசியமாக அறிந்து கொள்ள முயல்கின்றனர். அத்தகைய வலிமை வாய்ந்த கிரகம் சனிக் கிரகம்.

sani bagavaan

ஒருவருக்கு ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலையிலிருந்தால் எவ்விதக் குறையும் இருக்காது. அவர் சரியான இடத்தில் இல்லையென்றால் குறைகளின் மொத்த உருவமாக அந்த ஜாதகர் இருப்பார். இப்படிப்பட்ட சனிக் கிரக தோஷமுள்ளவர்களின் தோஷத்தை நீக்குபவர்கள் தான் ஸ்ரீகுரோதன பைரவரும் ஸ்ரீ வைஷ்ணவித் தாயாரும். அவர்களுக்குரிய மந்திரம் அதை ஜெபிப்பதன் மூலம் சனி தோஷம் அகலும்.

- Advertisement -

மந்திரம்:
ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே லட்சுமி தராய தீமஹி தன்னோ குரோதன பைரவ ப்ரசோதயாத்

ஓம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

இது “காயத்திரி மந்திர” வரிசையில் வரும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமாகும். பைரவர் ஆக்ரோஷமான தெய்வம் என்பதால் இம்மந்திரத்தை “திரிகரண சுத்தி” அதாவது உடல, மனம், ஆன்மா ஆகிய மூன்றும் தூய்மையான நிலையில் கொண்டு, சனிக்கிழமை அன்று பைரவர் சந்நிதிக்குச் சென்று மனதில் ஸ்ரீகுருதோன பைரவரையும், ஸ்ரீ வைஷ்ணவித் தாயாரையும் எண்ணி 108 அல்லது 1008 முறை மந்திர உருஜெபித்தல் வேண்டும். இதை சனிக்கிழமைகளில் தொடர்ந்து செய்து வர சனிக்கிரக தோஷம் நீங்கி உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

Advertisement