சனி பகவானால் இந்த 3 ராசிக்கு ஏற்ப்பட போகும் கேந்திர திரிகோண ராஜயோகம். இனி தொட்டதெல்லாம் துலங்கும் காலம் வரப்போகிறது.

sani bagavan
- Advertisement -

அரசனை பிச்சைக்காரனாக்குவதும், ஆண்டியை சக்கரவர்த்தியாக்குவதும் நவ கிரகங்களில் ஆயுட்காரனாகிய சனி பகவான் ஒருவராலேயே முடியும். சனிபகவான் தனது பெயர்ச்சி காலத்தில் 12 ராசிகளுக்கும், அவர்களின் கர்ம வினைக்கேற்ற பலன்களை தருகிறார். அந்த வகையில் தற்போது சனி பகவான் சுமார் 30 ஆண்டு காலத்திற்கு பிறகு தனது சொந்த வீடானதும், திரிகோண ராசியானதுமான கும்ப ராசியில் பெயர்ச்சியாகி உள்ளார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி வரை சனிபகவான் கும்ப ராசியிலேயே இருப்பார்.

sani bagavan

தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனிபகவான் ஜூன் மாதம் 17ஆம் தேதி தனது வக்கிர பெயர்ச்சி காலத்தை தொடங்குகிறார். கும்ப ராசியில் இருக்கின்ற சனிபகவானின் இந்த வக்கிர பெயர்ச்சி காலம் கேந்திர திரிகோண ராஜ யோகம் எனும் யோகத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

பொதுவாக சனியின் வக்கிர பெயர்ச்சி காலம் என்பது அந்தந்த ராசியினரின் கர்ம வினைக்கேற்ப பலன்கள் ஏற்படுமென்றாலும், இந்த மூன்று குறிப்பிட்ட ராசியினருக்கு மட்டும் சனி பகவானின் இந்த கேந்திர திரிகோண ராஜ யோகம் என்பது பலவிதமான நற்பலன்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த மூன்று ராசியினர் யார்? அவர்களுக்கான பலன்கள் என்ன? என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

- Advertisement -

சனிபகவான் இருக்கின்ற கும்ப ராசிக்கு மூன்றாவது வீடாக இருக்கின்ற மேஷ ராசியினருக்கு இந்த கேந்திர திரிகோண ராஜ யோகத்தால் பொருளாதார ரீதியில் பல ஏற்றங்கள் உண்டாகும். குறிப்பாக சொந்த தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழில் விரிவடைதல், கூட்டாளிகளால் லாபம் போன்ற நற்பலன்கள் ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு தாங்கள் விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் வருமானம் போன்றவை கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் அனைத்தும் சமூகமான முடிவுக்கு வரும்.

ரிஷபம்

- Advertisement -

kadan parigaram

சனிபகவான் தற்போது இருக்கின்ற கும்ப ராசிக்கு நான்காம் வீடான ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பகவானின் வக்கிர பெயர்ச்சியால் ஏற்படுகின்ற கேந்திர திரிகோண ராஜயோகத்தால் எதிர்பாராத பல நற்பலன்களை கொடுக்கும். இருக்கின்ற வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாற முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல அதிகாரங்கள் கொண்ட பதவி உயர்வு கிடைக்கும். அதே நேரம் அவர்களுக்கான உத்தியோக பொறுப்புகளும் கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவையும் உண்டாக்கும்.

சிம்மம்

Leo zodiac sign

கும்ப ராசிக்கு ஏழாம் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கேந்திர திரிகோண ராஜ யோக காலத்தில் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபார துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த லாபங்கள் பெறக்கூடிய யோகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவர்கள் பணிபுரியும் துறையில் உயர்ந்தபட்ச பதவியை பெறுவார்கள். சிலருக்கு புதிய வாகனம், ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும். ஈடுபடுகின்ற காரியங்கள் அனைத்தும் தடங்கல் இன்றி சிறப்பாக முடியும். இந்த ராசியினருக்கு பல வழிகளிலும் இந்த காலகட்டத்தில் வருமானம் கிடைக்கும்.

- Advertisement -