இவ்வாறு நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் சனிபகவான் நமது வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவார். அப்படி நாம் செய்யும் தவறுகள் என்னவென்று தெரியுமா

sani
- Advertisement -

நவகிரகங்களில் இவரது பெயரை சொன்னால் மட்டும் அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படும். அவர்தான் சனி பகவான். சனி பகவான் நம்மை பிடித்து விட்டால் நாம் கஷ்டத்திற்கு ஆளாகி விடுவோம். படாதபாடுபட்டு, படுதுயரங்களை அனுபவித்து அரசனாக இருப்பவர்களையும் ஆண்டியாக்கும் சக்தி சனிபகவானுக்கு இருக்கிறது. இவரின் பிடியில் இருந்து தப்பிப்பது என்பது சற்று கடினமான காரியம்தான். ஒருவர் செய்த பூர்வ ஜென்ம பாவத்தின் காரணமாகவே அதற்கான தண்டனையை வழங்கும் வகையில் இப்பிறவியில் சனிபகவான் நமக்கு பல கஷ்டங்களை கொடுத்து நம்மை பக்குவப்படுத்தி வழிநடத்துகிறார். நாம் வீட்டில் செய்யக்கூடிய ஒரு சில தவறுகளால் சனி பகவான் நமது வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுகிறார். இதனால் கஷ்டத்தில் இருந்து விடுபடுவதற்கு வழி இல்லாமல் போகிறது. அவ்வாறு வீட்டில் நாம் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

sani-bagavaanl

தாய் தந்தை எந்த வழி முறைகளை பின்பற்றுகிறார்கள் அதனையே குழந்தைகளும் தொடர்ந்து செய்கிறார்கள். பெற்றோர்களுக்கே தான் செய்வது தவறு என்று தெரியாத பொழுது இந்த குழந்தைகளுக்கு என்ன தெரியும். எனவே எந்த தவறுகளை எல்லாம் நாம் செய்து வருகின்றோமோ அவற்றை இனியாவது செய்யாமல் தவிர்த்து வந்தால் சனி தோஷத்தின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும்.

- Advertisement -

சனி பகவான் என்பவர் சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் எமன் இவரது அண்ணன் அவர் பொதுவாகவே காகத்தை வாகனமாகக் கொண்டுள்ளார் இவரது கால் சற்று ஊனமாக இருப்பதனால் கொஞ்சம் மந்தமாகவே நடப்பார் எனவே இவருக்கு மந்தன் என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

surya-bhagavan

சனி பகவானைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்கள் இவரை பார்த்து பயப்பட மாட்டார்கள். சூரிய பகவானின் மனைவி சந்தியா சூரியனின் வெப்பம் தாங்காமல் பூலோகத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் அவரின் நிழலாக ஒரு உருவத்தை உருவாக்கி அவரிடத்தில் விட்டுவிட்டு பூலோகம் சென்றார். இதனை அறியாத சூரியபகவான் சாயா தேவியுடன் வாழ்ந்து அவர்களுக்கு பிறந்தவர்தான் சனி பகவான்.

- Advertisement -

நிழல் உருவத்திற்கு பிறந்தவர் சனி பகவான் என்பதால் அவர் கரிய நிறத்திலிருந்தார். இவரின் கருமை நிறத்தை காரணம் காட்டி தனது மகனாக ஏற்க முடியாது என்று சூரிய பகவான் அவரை ஒதுக்கினார். இதனைத் தாங்க முடியாத சாயாதேவி அழுது கொண்டிருந்த காரணத்தினால் சனி பகவானின் கோபப் பார்வை சூரியன் மீது விழுந்தது. இதனால் கிரகணம் பிடிக்க ஆரம்பித்தது. இதனைப் பற்றி அறிந்துகொள்ள சூரிய பகவான் சிவபெருமானை அணுகினார்.

sivan

சிவபெருமானே யார் இந்த சனி என்று அவர் கேட்டதற்கு தேவர்கள் கடவுள்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் பாவ புண்ணியத்தின் பலனை கொடுக்க வல்லவன் தான் சனி என்று சிவபெருமான் கூறினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த சூரிய பகவான் சனியை மகனாக ஏற்றுக்கொண்டார். உரிய வயது வரும்போது சனியும் தனது கடமையை உணர்ந்து கொண்டார்.

வீட்டில் தேவையில்லாத பொருட்களை சேர்த்து வைப்பது, படுக்கையிலேயே அமர்ந்து உணவு மற்றும் நொறுக்கு தீனிகளை உண்பது, ஈரமான துணிகளை வீட்டிற்குள்ளேயே அங்கும் இங்குமாக போடுவது, வீட்டை சுத்தம் செய்யாமல் ஒட்டடையுடன் வைத்திருப்பது, குளிப்பதற்கு கூட சோம்பேறித்தனம் படுவது, எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பது போன்ற பழக்க வழக்கங்களை கொண்டிருந்தால் சனி பகவான் நமது வீட்டுக்குள் குடி ஏறி நிரந்தரமாக அமர்ந்து விடுவார்.kanavu

சனி போல் கொடுப்பாரும் இல்லை. சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை. இவ்வாறு சனி பகவான் நாம் செய்த பாவத்திற்கு பலனாக கொடுக்க நினைக்கும் கஷ்டத்திற்கும் அளவே இருக்காது. அதே போல் நாம் செய்த புண்ணியத்திற்கு ஈடாக அவர் கொடுக்கும் செல்வத்திற்கும் ஈடு இணையே இருக்காது.

- Advertisement -