பிரச்சனைகளை போக்கும் சப்த கன்னியர் மந்திரம்

saptha-kannimar-1

சப்த கன்னிமார்கள் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம், கோவிலிலும் வழிபட்டிருப்போம். சிவசக்தி எடுத்த திருமேனிகளான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோரே சப்த கன்னிகள் அல்லது சப்த கன்னிமார்கள் என்று பக்தர்களால் போற்றப்படுகின்றனர். இவர்களை மனதார வழிபட்டு அவர்களுக்கான மந்திரம் அதை ஜெபிப்பதன் மூலம் பெண்களால் ஏற்படும் பிரச்சனைகள், பெண் சாபம் உள்ளிட்ட அனைத்தும் விலகும்.

Saptha Kannimar
Saptha Kannimar

சப்த கன்னிகள் மந்திரம்

ஏழென ஆனா மாதர்
இணையடிக் கமலம் போற்றி
பாழெனத் துன்பம் நீக்கி
பன்னலம் அருளும் நல்ல
கோள்களின் கவசம் கூற
குறித்தவச் சப்த மாதர்
நாளினில் வந்து காப்பார்
நலம் தரும் துளசி கூற்றே.

மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி தினத்தில் காலையிலோ அல்லது மாலையிலோ சப்த கன்னிமார்களின் கோவில் அல்லது சந்நிதிக்கு சென்று, நெய் விளக்கேற்றி, இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதால் ஒருவருக்கு பெண்கள் சம்பந்தமான ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் நீங்கும். எதிர்காலத்தில் பெண்களால் எந்த ஒரு விவகாரங்களும், விரயங்களும் ஏற்படாமல் காக்கும். இதை 27 வளர்பிறை ஏகாதசி தினங்களுக்கு கடைபிடித்தால் அந்த பெண்கள் வழியில் பல நன்மைகள் ஏற்படும்.

எந்த ஒரு உயிர்களிலும் ஆண் மற்றும் பெண் இனம் சேர்ந்து வாழ்ந்து, எதிர்கால சந்ததியை உருவாக்குகின்றன. அதிலும் மனித இனத்தில் பெண்கள் மிக உயர்வான ஒரு பிறவியாக கருதப்படுகிறார்கள். காரணம், உலகில் அனைத்தையும் விட உயர்ந்ததான அன்பு மற்றும் தாய்மைக்கு உதாரணமாக இருக்கிறார்கள். மேலும் எந்த ஒரு வீட்டில் பெண்கள் வீணாக கண்ணீர் சிந்தாமல், நல்ல நிலையில் நடத்தப்படுகிறார்களோ அந்த வீட்டில் எல்லா விதமான மங்கலங்களும் ஏற்படும்.

Saptha Kannimar
Saptha Kannimar

நமது இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்களின் படி ஒரு பெண் என்பவள் செல்வத்தின் மருவுருவான லட்சுமி தேவியின் அம்சமாகவே கருதப்படுகிறாள். ஆண்கள் அனைவரின் வாழ்க்கையுமே எக்காலத்திலும் ஒரு பெண்ணை சார்ந்ததாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த சப்த கன்னிகள் வழிபாடு என்பது நமது தமிழ் நாட்டில் மிக பழமையான காலத்திலிருந்தே பின்பற்றப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். மூன்று தேவிமார்களின் சக்திகளை கொண்ட இந்த சப்த கன்னிமார்களின் இந்த மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் சிறந்த நன்மைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
கணவன் வசிய மந்திரம்

English Overview:
Here we have Saptha kannigal mantra in Tamil or Saptha kannimar mantra in Tamil. By chanting this mantra one can get away from women problems.