குலதெய்வமே தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால், குலதெய்வத்தை வழிபட்ட பலனை பெற முடியும்?

murugan-om
- Advertisement -

நிறைய பேருக்கு இன்று குலதெய்வ வழிபாட்டின் அருமை பெருமைகள் தெரிந்து, முக்கியத்துவம் அறிந்து குலதெய்வத்தை, குடும்பத்தோடு சென்று வழிபடும் பழக்கத்தை மேற்கொள்கிறார்கள். சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருக்கின்றது. இப்படி குலதெய்வமே தெரியாதவர்கள் வேறு எந்த தெய்வத்தினை வழிபாடு செய்தால் குலதெய்வத்தின், ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பதைப் பற்றிய சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே குலதெய்வம் தெரியாதவர்கள் காமாட்சி அம்மனை குல தெய்வமாக நினைத்து வழிபாடு செய்வார்கள்.

kuladheivam 1

இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள மக்களையும், உயிர் உள்ள ஜீவராசிகள் அத்தனையும் காப்பதில் அம்மன் தெய்வங்களுக்கு முதலிடம் உண்டு. அந்த வரிசையில் இந்த உலகத்திற்கு ஒரு ஆபத்து என்று வரும்போது, ஊசி முனையில் தவம் இருந்து இந்த உலகத்தை காப்பாற்றிய பெருமை காமாட்சி அம்மனுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. குலதெய்வம் தெரியாதவர்கள் காமாட்சி அம்மனை நினைத்து வணங்குவது நன்மை தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

சிலபேர் முருகப்பெருமானை குல தெய்வமாக நினைத்து வழிபாடு செய்வார்கள். குறிப்பாக திருச்செந்தூர் முருகப்பெருமானை நிறைய பேர் தங்களுடைய குல தெய்வமாக ஏற்று வழிபாடு செய்வது வழக்கத்தில் உண்டு. அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது. திருச்செந்தூர் முருகப்பெருமான் அல்லாது மற்ற முருகப் பெருமானையும் குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்து வரலாம். அறுபடை வீடுகளில் இருக்கும் முருகப்பெருமானில் உங்களுக்கு இஷ்ட தெய்வமாக இருக்கும் முருகனை நினைத்து கூட, நீங்கள் அந்த முருகரை குல தெய்வமாக பாவித்து வழிபாடு செய்யலாம். குலதெய்வம் தெரியாத பட்சத்தில்.

Lord Murugan Vel

குலதெய்வமே தெரியாதவர்கள் உங்களுடைய வீட்டில் முருகப்பெருமானின் கையில் இருக்கக் கூடியது போல், ஒரு வேலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செம்பு, பித்தளை, தங்கம், வெள்ளி, பஞ்சலோகம் இப்படி அவரவர் வசதிக்கு ஏற்றவாறு எந்த உலோகத்தில் வேண்டுமென்றாலும் வேல்வாங்கி வழிபாடு செய்யலாம். ஒரு சிறிய சொம்பில் விபூதியை கொட்டி வைத்து விட்டு அந்த வேலை சொருகி, உங்கள் குல தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வரலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக குலதெய்வமே தெரியாதவர்கள் சப்தகன்னியரை வழிபாடு செய்யலாம். சப்த கன்னியர்களில் யாராவது ஒருவரை, குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்தால், குல தெய்வத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குலதெய்வத்திற்கு பதிலாக வேறு தெய்வத்தை வழிபடுதற்கு முன்பாகவும் உங்கள் வீட்டு பூஜை அறையில் ‘குல தெய்வமே எங்கள் துணை’ என்ற வார்த்தையை உச்சரிக்க மறக்காதீர்கள்.

Saptha kannimar

உங்கள் குலதெய்வத்தை நீங்கள் நினைத்து வேண்டிக் கொள்வது, உங்களுடைய குல தெய்வத்திற்கு நிச்சயம் தெரியும். குலதெய்வம் தெரியவில்லையே என்ற கவலையை விட்டுவிட்டு, தெரியாத குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெற மேற்சொன்னபடி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நல்லது நினைப்பவர்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -