இனி கொஞ்சம் கூட கையே படாமல் கஷ்டப்பட்டு தேய்க்காமல் உங்க டாய்லெட்டை சுத்தப்படுத்தலாம்ன்னா நம்புவீங்களா? பல வருடம் மஞ்சள் கறை படிந்த டாய்லெட் கூட பளிச்சின்னு புதுசு போல மாற்ற ஒரு சூப்பர் டிரிக்ஸ்.

- Advertisement -

எப்பொழுதுமே பாத்திரம் டாய்லெட் போன்றவற்றை எல்லாம் சுத்தம் செய்வது கொஞ்சம் முகத்தை சுழிக்க கூடிய விஷயம் தான். இவற்றை சுத்தமாக வைத்திருந்தால் தான் நாம் நோய் நொடி இல்லாமல் வாழ முடியும் என்பது தெரிந்தாலும் இதை யாரும் சந்தோஷமாக சுத்தப்படுத்த மாட்டார்கள் தானே. காரணம் இந்த டாய்லெட்டில் எல்லாம் நம் பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டியதாக இருக்கும் என்பதால் தான். இனி இப்படி நீங்கள் வருத்தப்படவே தேவையில்லை கொஞ்சம் கூட கையே படாமல், பிரஷ் வைத்து தேய்க்காமல் உங்கள் டாய்லெட்டை பளிச்சென்று மாற்ற வீட்டுக் குறிப்பு பதிவில் அருமையான ஐடியாவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

டாய்லெட்டை நிமிடத்தில் சுத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும்
இதற்கு நீங்கள் துணி துவைக்க பயன்படுத்தும் ஏதாவது ஒரு சோப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக துருவி தூள் செய்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் வீட்டின் பிரிட்ஜில் எந்த காய் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் காய்ந்து போன நான்கு எலுமிச்சை பழங்கள் இருக்கும். இந்த பழங்களை எடுத்து சாறு பிழிந்து, இந்த சாறை கால் கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது நாம் தூள் செய்து வைத்த சோப்பில் எலுமிச்சை சாறு கலந்த பிறகு நான்கு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சமையல் சோடாவையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

அதன் பிறகு கொகித்துக் கொண்டிருக்கும் தண்ணீரை இந்த கலவையில் ஊற்றி நன்றாக கலந்து ஆற வைத்த பிறகு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த லிக்வீட்டை இரவு அனைவரும் உறங்கிய பிறகு உங்கள் டாய்லெட்டில் ஊற்றி அப்படியே விட்டு விடுங்கள். இது எட்டு மணி நேரம் வரை இது அப்படியே ஊறட்டும் அடுத்த நாள் காலையில் கொஞ்சம் கூட தேய்க்காமல், இதன் மேல் கொஞ்சம் போர்சாக தண்ணீரை மட்டும் அடித்து விடுங்கள் போதும் சுற்றி இருக்கும் கறைகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

இப்போது இந்த லிக்விடை தயாரிக்க நாம் பயன்படுத்தி எலுமிச்சை பழத்தின் சாறு போக மீதம் தோல்கள் இருக்கும் அல்லவா அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அதில் கொஞ்சம் பெருங்காயத் தூளை சேர்த்து விட்டு இறக்கி வைத்து விடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் தனியாக ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இப்படி அழுக்கு படிந்த சோபா தான் உங்க வீட்டு ஹாலில் இருக்கிறதா? 10 நிமிடத்தில் வாக்யூம் கிளீனர் இல்லாமல் அதை சுத்தம் செய்ய இதோ ஒரு சூப்பர் ஐடியா.

இந்த ஸ்பிரே உங்க வீட்டில் கிச்சன், சிங்க், வாஷ்பேஷன், ஜன்னல் போன்ற இடங்களில் எல்லாம் லேசாக ஸ்பிரே செய்தால் போதும் இதன் வாடைக்கு பூச்சி வண்டு எதுவும் வராது. இந்த வீட்டுக்குறிப்பு பதிவில் டாய்லெட்டை சுத்தம் செய்வதை பற்றியும், வீட்டில் பூச்சிகள் வராமல் இருக்க லிக்வீட் தயாரிப்பது பற்றிய குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -