சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு

Sarojini
- Advertisement -

பன்முகம் கொண்ட ஒரு தைரிய மங்கையான சரோஜினி நாயுடு மிக சிறந்த ஒரு பேச்சாளர், கவிஞர், அரசியல்வாதி, போராளி மற்றும் ஆளுநர் என்று இவரின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம் . அந்த அளவிற்கு இவரின் புகழ் பரவியுள்ளது.

sarojini naidu 1

இவரின் புகழே இவருக்கான அடையாளம் எனும் அளவிற்கு புகழினை சம்பாதித்து வைத்துள்ளார். அவரின் வாழ்க்கை தொகுப்பினையே இந்த பதிவில் நாம் காணஉள்ளோம். சரோஜினி நாயுடுவின் சுவாரசியமான வாழ்க்கையினை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

- Advertisement -

சரோஜினி நாயுடு பிறப்பு :

சரோஜினி நாயுடு அவர்கள் பிப்ரவரி 13ஆம் தேதி 1879ஆம் ஆண்டு [13-02-1879]ஆந்திர மாநிலத்தில் உள்ள “ஹைதராபாத்” மாநகரில் பிறந்தார். அவருடைய தந்தை அகோர்நாத் சடோபத்யாயா பெரிய கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த மிகப்பெரிய செல்வந்தர். தாய் பரத சுந்தரி இவர் ஒரு பெண் கவிஞர். இவரது உடன்பிறந்தவர்களோடு சேர்த்து மொத்தம் 8 பேர் அவரது குடும்பத்தில் இருந்தனர். ஆனால், இவரே அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை. இவர்களது குடும்பம் பெங்காலி பிராமணர் கும்பம்

பெயர் – சரோஜினி நாயுடு
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – பிப்ரவரி 13 1879 [13-02-1879]
பெற்றோர்கள் – அகோர்நாத் சடோபத்யாயா, பரத சுந்தரி தேவி
பிறந்த இடம் – ஹைதராபாத்
வசித்த இடம் – லக்னோ

- Advertisement -

sarojini naidu 2

சரோஜினி நாயுடு கல்வி மற்றும் படிப்பு :

சரோஜினி நாயுடு தனது சிறுவயது முதலே கல்வியின் மீது ஈடுபாடு கொண்டவர். எனவே, படிப்பு இவருக்கு சவாலான ஒன்றாக அமையவில்லை. நன்றாக படிக்கும் ஆற்றலினை பெற்ற இவர் தனது 12ஆம் வயதில் சென்னை பல்கலைகழகத்தில் மெட்ரிகுலேசன் பிரிவில் தேர்ச்சி பெற்றார்.

- Advertisement -

இவரின் கல்வி மற்றும் கவிதை எழுதும் திறன் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அதுமட்டுமில்லாமல் இவர் பல மொழிகளை கற்க ஆரம்பித்தார். குறிப்பாக ஆங்கிலம், தெலுங்கு,உருது, பாரசீகம் மற்றும் பெங்காலி போன்ற பல மொழி கற்று தேர்ந்தார்.

இவரின் திறனை கண்ட நிஜம் அறக்கட்டளை அவரின் மேற்படிப்புக்கான செலவினை ஏற்று அவரை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்த்து அங்கு தந்து படிப்பினை முடித்த அவர் மேலும் படிக்க எண்ணி கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியிலும் பயின்றார்.

மெட்ரிகுலேசன் படிப்பு – சென்னை பல்கலைக்கழகம்

பட்டப்படிப்பு – கிங்ஸ் கல்லூரி [லண்டன் ] மற்றும் கிர்டன் கல்லூரி [கேம்பிரிட்ஜ் ]

sarojini naidu 4

சரோஜினி நாயுடுவின் காதல் மற்றும் திருமணம்:

அவர் இங்கிலாந்தில் தனது மேற்படிப்பினை பயின்று கொண்டிருக்கும் போது முத்யாலா கோவிந்தராஜூலு என்பவரை காதலித்தார். கோவிந்தராஜூலு ஒரு மருத்துவர் அவரை இரண்டு வருடங்களாக காதலித்து அவரை தனது 19ஆவது வயதில் திருமணமும் செய்துகொண்டார்.

அவர்களது திருமணம் ஒரு சாதியிடை திருமணம் ஆகும். அந்த காலத்தில் வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வது என்பது மிகக்கடினம். ஆனால், இவர்களது திருமணம் சரோஜினி நாயுடு அவர்களின் தந்தையின் முழு சம்மதத்தோடு சென்னையில் உள்ள அவரது நண்பரின் உதவியோடு அவரது இல்லத்தில் நடந்தது.

திருமண வாழ்வில் சிறந்த முறையில் இருந்த இவர்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர்கள் ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி .

சரோஜினி நாயுடு அரசியல் மற்றும் சுதந்திர போராட்ட பங்கு :

சரோஜினி நாயுடு மக்களின் மீது விசாலமான பார்வியினை வைத்திருந்தார். 1905 ஆம் ஆண்டு நடந்த வங்கபிரிவின் அடுத்து தன்னை இந்திய தேசிய இயக்கத்தில் இணைத்த அவர் தண்டியில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். பலர் கைதான பின்பும் தனது போராட்டத்தினை தொடர்ந்து தனது வலிமையினை காண்பித்தார்.

1925ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு அதே ஆண்டில் கான்பூரில் நடைபெற்ற சட்டமறுப்பு இயக்கத்தில் காந்திஅடிகளுடன் சேர்ந்து சிறை சென்றார். பிறகு 6 வருடங்கள் கழித்து 1931ஆம் ஆண்டு விடுத்தலை செய்யப்பட்டார்.

அதன் பிறகும் அவர் சுதந்திர போராட்ட முறையற்சிகளை தொடர்ந்தார் அவர் 1942ல் நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறை சென்றார்.

sarojini_naidu 3

இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்:

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் உத்திரபிரதேசத்தின் ஆளுநர் ஆனார் . இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற சிறப்பினையும் பெற்றார். அவரது சிறப்பான நடவடிக்கைகள் மூலம் தான் ஒரு சிறந்த தலைமை பொறுப்பு வாய்ந்த நபர் என்று அவர் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்தார்.

சரோஜினி நாயுடு இறப்பு :

ஆளுநர் ஆன 2 வருடங்கள் கழித்து 1949ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி அவரது அலுவலகத்தில் பணி நேரத்தின் போதே மாரடைப்பு ஏற்பட்டு தனது இன்னுயிரை துறந்தார். அவருடைய வாழ்க்கை பெண் போராளிகள் மற்றும் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.

English Overview:
Here we have Sarojini Naidu biography in Tamil. Sarojini Naidu is a great Leader who lived in Lucknow, India. Above we have Sarojini Naidu history in Tamil. It is also called as Sarojini Naidu varalaru or Sarojini Naidu essay or Sarojini Naidu katturai in Tamil.

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -