சருமத்தில் இருக்கக்கூடிய அனைத்து வகையான பிரச்சனைகளையும் சரி செய்து என்றும் இளமையாகவும், பிரகாசமாகவும், மிருதுவாகவும் மாற்றுவதற்கு இந்த ஒரு ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினாலே போதும்.

clear skin
- Advertisement -

முக அழகை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் பல இருக்கின்றன. முகப்பரு, வடுக்கள், கரும்புள்ளிகள், தேமல், முகச்சுருக்கம், சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை, மங்கு, மூக்கின் மேல் இருக்கும் பிளாக் ஹேட்ஸ் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதில் எந்த பிரச்சனை இருந்தாலும், இல்லாவிட்டாலும் முகத்தை இளமையாகவும், நிறமாகவும், மிருதுவாகவும், குழந்தை சருமம் போல மாற்றுவதற்கு எந்த பேக்கை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பளிங்கு போன்று எந்தவித இடையூறுகளும் இல்லாமல் சருமம் வழுவழுப்பாகவும், மிருதுவாகவும் இருந்தால் அதைவிட ஒரு பெரிய வரம் பெண்களுக்கு இருக்காது. அப்படிப்பட்ட முகத்தை பெறுவதற்குரிய அருமையான அதே சமயம் மிகவும் எளிமையான ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். இவை மூன்றுமே நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்கள்தான். முதலாவது கடலை மாவு. கடலை மாவு முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தையும் நீக்கி முக சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பொருள். அடுத்ததாக கற்றாழை ஜெல். இது முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு உதவுகிறது. மூன்றாவதாக நாம் சேர்க்கப் போவது தான் பாலாடை இந்த பாலாடையை நாம் முகத்தில் உபயோகப்படுத்தினால் முகம் மிருதுவாகவும், அதே நேரத்தில் முக நிறத்தில் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

பால் காய்ச்சிய பிறகு மேலே ஆடையாக படியும் பாலாடையை தான் நாம் சேகரித்து வைக்க வேண்டும். இதை அப்படியே உபயோகப்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக மூன்று நாட்களுக்கு சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு அவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அரைக்கும் பொழுது அது கிரீம் போன்று வந்துவிடும். இப்பொழுது இதை எடுத்து நாம் பிரிட்ஜில் வைத்துக் கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது எல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

சுத்தமான ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக நாம் அரைத்து வைத்திருக்கும் பாலாடை கிரீமில் இருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு இதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகி விட்டது‌.

முகத்தை நன்றாக சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். முகத்தில் எந்தவித கிரீம், பவுடர் அல்லது மேக்கப் இருக்கக் கூடாது. முகத்தை நன்றாக கழுவிய பிறகு நாம் தயாரித்து வைத்திருக்கும் இந்த பேக்கை நம் முகத்தில் தடவ வேண்டும். முகத்தோடு சேர்த்து கழுத்தில் தடவிக் கொள்ளலாம். அப்படியே 20 நிமிடம் விட்டு விட வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.

- Advertisement -

ஒருமுறை இந்த பேக்கை போட்டாலே நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும். மேலும் இந்த பேக் அனைத்து வகையான சருமத்திற்கும் பொருந்தும் என்பதால் இதை யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். வாரத்தின் மூன்று நாட்கள் மட்டும் உபயோகித்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: எந்த ஒரு காஸ்லியான கண்டிஷனரும் போடாமல் உங்கள் முடியை சில்கியாக ஷைனிங்காக மாற்ற செலவே இல்லாத சிம்பிள் ஐடியா இது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏற்ற இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி முகத்தை என்றும் இளமையாகவும், பிரகாசமாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -