வெறும் 4 ஏலக்காய் இருந்தால் போதும். தினம் தினம் வைரம் போல உங்களுடைய முகத்தின் ஜொலி ஜொலிப்பு கூடிக் கொண்டே செல்லும்.

face3
- Advertisement -

தினம் தினம் நம்முடைய அழகை மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் பருக வேண்டும். நிறைய பழ வகைகளை சாப்பிட்டு வர வேண்டும். இதோடு சேர்த்து பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றும்போது உங்களுடைய அழகு இன்னும் பல மடங்காக அதிகரிக்கும். இந்த குறிப்புக்கு சமையலறையில் இருக்கக்கூடிய சில பொருட்களை தான் நாம் பயன்படுத்த போகின்றோம். குறைந்த செலவில் உங்களுடைய அழகை மெருகூட்டும் இந்த குறிப்பை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசையாக உள்ளதா. வாங்க நேரத்தை கலக்காமல் அந்த குறிப்பை பார்த்து விடலாம்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் 4, போட்டு நன்றாக அரைக்க வேண்டும். கடலை மாவோடு சேர்த்து ஏலக்காய் நன்றாக பொடியாக அரை பட்டு கிடைத்து விடும். இந்த மாவு அவ்வளவு வாசமாக இருக்கும். இதை ஒரு காற்று வெளியே போகாத டப்பாவில் போட்டு மூடி ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது எல்லாம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு ஏலக்காய் சேர்த்த கடலைமாவை போட்டுக்கொள்ள வேண்டும். இதில் அதிகம் புளிப்பு இல்லாத தயிரை ஊற்றி நன்றாக கலந்து பேக் போல தயார் செய்து கொள்ளுங்கள். இதை உங்களுடைய முகம் கழுத்துப் பகுதிகளில் போட்டுவிட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை நனைத்து வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும். சோப்பு போட்டு முகத்தை கழுவ கூடாது. (தேவைப்பட்டால் இந்த பேங்கை உடல் முழுவதும் பூசி கூட குலிக்கலாம்.)

ஒருமுறை இந்த பேக்கை போடும்போதே உங்களுடைய முகத்தில் நல்ல ஒரு பொலிவு கிடைத்திருக்கும். முகம் வெள்ளை நிறமாக மாறி இருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.‌ வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தி வந்தால் நிரந்தரமாக உங்களுடைய முகம் பளபளப்பாக ஜொலிக்க தொடங்கி விடும்.

- Advertisement -

சில பேருடைய சருமத்திற்கு கடலை மாவு செட்டாகாது. சில பேருக்கு தயிர் செட்டாகாது. பரவாயில்லை, கடலை மாவுக்கு பதிலாக கோதுமை மாவு, பச்சைபயிறு மாவு, பாசிப்பயறு என்ற சொல்லப்படும் சிறுபருப்பு மாவு, இந்த மாவில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியும் நீங்கள் பேக் தயாரித்துக் கொள்ளலாம். பொங்கலுக்கு சேர்ப்பார்கள் அல்லவா அந்த பாசிப்பருப்பு தான்.

தயிருக்கு பதிலாக வெறும் தண்ணீர் பயன்படுத்தலாம். அல்லது ரோஸ் வாட்டர் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். முகப்பரு உள்ளவர்கள் பெரும்பாலும் தயிர் பயன்படுத்த வேண்டாம். இதே போல முகப்பரு உள்ளவர்கள் பேக்கை போட்டுவிட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும். முகத்தை மசாஜ் செய்யக்கூடாது.

இந்த குறிப்பில் ஏலக்காய் மிக மிக அவசியம். எந்த மாவை நீங்கள் பயன்படுத்தினாலும் அதில் ஏலக்காயை போட்டுவிட்டு அரைத்து அதன் பின்பு பயன்படுத்துங்கள். உங்களுடைய அழகு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை ஒரு சில நாட்களில் நீங்களே உணர முடியும். அழகுக்கு அழகு சேர்க்கக்கூடிய இந்த குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -