சர்வ மங்களம் உண்டாக வழிபாடு

kalasam pooja
- Advertisement -

விசேஷமான நாட்களில் பெரியவர்களிடமிருந்து ஆசிர்வாதம் வாங்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. அப்படி ஆசீர்வாதம் வாங்கும் பொழுது சர்வ மங்களமும் உண்டாகட்டும் என்று கூறுவார்கள். மங்களத்திற்குரிய காரகனாக திகழக்கூடியவர் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான். இவர்கள் இருவரும் ஒருவருடைய ஜாதகத்தில் சிறப்பாக அமைந்து விட்டால் அவருக்கு வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது என்று தான் கூற வேண்டும். அப்படி குறைகள் அற்ற மங்களகரமான வாழ்க்கையை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவருக்கு அனைத்து விதமான மங்கலங்களையும் தரக்கூடிய தெய்வமாக முதலில் வரக்கூடிய தெய்வம் குலதெய்வமே. அதற்கு பிறகாக வரக்கூடிய தெய்வம் இஷ்ட தெய்வம். மூன்றாவதாக வரக்கூடிய தெய்வம் மகாலட்சுமி தாயார். இவர்கள் மூவரையும் நினைத்து மிகவும் எளிமையான முறையில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் ஒரு வழிபாட்டை செய்வதன் மூலம் அனைத்து விதமான சுக போக வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

- Advertisement -

செவ்வாய் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்பவர்கள் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் திங்கள் வியாழக்கிழமையில் வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இரண்டு மாயிலை கொத்துகளை பறித்து வந்து செவ்வாய்க்கிழமை அன்று காலையில் ஒரு மாயிலை கொத்தை நிலை வாசலில் வைத்து விட வேண்டும். பிறகு ஒரு கலச சொம்பை எடுத்து அதை சுத்தம் செய்து, அதற்கு சந்தன குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் முக்கால் பங்கு பச்சரிசியை நிரப்பி அதற்கு மேல் மற்றொரு மாயிலை கொத்தை வைக்க வேண்டும். பிறகு ஒரு நல்ல தேங்காயை வாங்கி வந்து அதை சுத்தம் செய்து அதற்கு மேல் மஞ்சள் முழுவதையும் தடவி நான்கு புறங்களில் குங்குமத்தை வைத்து மா இலைக்கு மேல் வைத்து விட வேண்டும். இப்பொழுது இரண்டு கைகளால் இந்த கலசத்தை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம், மகாலட்சுமி தாயார் இவர்கள் மூவரையும் நினைத்து இவர்களுடைய மந்திரங்களையும் அல்லது நாமங்களையும் நம்மால் இயன்ற அளவு 27 முறையோ 51 முறையோ அல்லது 108 முறையோ கூறி உதிரி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். செவ்வாய்க்கிழமை இந்த பூஜையை செய்து முடித்த பிறகு வெள்ளிக்கிழமை அன்று இந்த கலசத்தை பிரித்து அதில் இருக்கும் பச்சரிசியை எடுத்து பொங்கல் செய்து நெய்வேத்தியம் வைக்க வேண்டும். மறுபடியும் கலசத்தை சுத்தம் செய்து பச்சரிசியை நிரப்பி மாயிலை கொத்தை வைத்து தேங்காயை வைக்க வேண்டும். பழைய தேங்காயை உடைத்து கடவுளுக்கு நெய்வேத்தியமாக சமர்ப்பித்து விட வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இந்த முறையில் நாம் கலசம் வைத்து பூஜை செய்ய குலதெய்வ, இஷ்ட தெய்வ, மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சர்வ மங்களமும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: வருமானம் அதிகரிக்கவும் கடன் பிரச்சினை தீரவும் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை நாமும் நம் இல்லங்களில் நம்பிக்கையுடன் செய்து சர்வ மங்களங்களையும் பெறுவோம்.

- Advertisement -