இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் என்றைக்கு ஆரம்பிப்பது? விரதத்தை தொடங்க வேண்டிய நாள், நேரம், முருகனின் அருள் ஆசையை முழுமையாக பெற உச்சரிக்க வேண்டிய மந்திரம்.

murugan-om
- Advertisement -

இந்த வருடம் பண்டிகை நாளன்று சூரிய கிரகணம் வந்துவிட்டதால், எல்லோருக்குமே விரதத்தை எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பம் இருந்து வருகிறது. அதில் இந்த கந்த சஷ்டி விரதத்தை என்று தொடங்கி, என்று முடிப்பது என்ற சந்தேகமும் நிறைய பேருக்கு இருக்கிறது. அந்த சந்தேகத்திற்கு உண்டான பதிலையும், கந்த சஷ்டி விரதத்தை முறையாக கடைபிடிப்பது எப்படி, விரதத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான குறிப்புகளை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 25ஆம் தேதி தான் தொடங்குகின்றது. 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அம்மாவாசை திதியும் உள்ளது. அதேசமயம் செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு மேல், பிரதமை திதி பிறந்து விடுகிறது. ஆகவே எந்த சந்தேகமும் இல்லாமல் நீங்கள் அக்டோபர் 25, செவ்வாய் கிழமையே உங்களுடைய சஷ்டி விரதத்தை தொடங்கலாம்.

- Advertisement -

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், திருச்செந்தூரில் அக்டோபர் 30 ஆம் தேதி தான் சூரசம்காரம் நடைபெறுகின்றது. ஆகவே அந்த நாளிலிருந்து ஆறு நாட்கள் பின்னால் கணக்கு போட்டால், 25ஆம் தேதி விரதத்தை தொடங்குவது தான் சரியான நாள். சரி, 25 ஆம் திதி அமாவாசை விரதம் இருக்கிறது. கேதார கௌரி விரதம் இருக்கிறது. கிரகணமும் இருக்கிறது. இதில் இந்த கந்த சஷ்டி விரதத்தை நாம் எந்த நேரத்தில் ஆரம்பிப்பது.

அக்டோபர் 25ஆம் தேதி காலை 11:30 மணிக்குள் அமாவாசை விரதத்தையும், கேதார கௌரி விரதத்தையும் நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு கிரகண நேரம் தொடங்கி விடுகிறது. கிரகணம் முடிந்த பின்பு மாலை 6:30 மணிக்கு மேல், கந்த சஷ்டி விரதம் தொடங்க வேண்டும். விரதத்தை தொடங்குபவர்கள் தலைக்கு குளித்து முடித்துவிட்டு, அதன் பின்பு பூஜை அறையை எல்லாம் சுத்தம் செய்து, வீட்டை சுத்தம் செய்து, மாலை 7.30 மணிக்கு மேல் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பு ஒரு நெய் அகல் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய சஷ்டி விரதத்தை தொடங்கலாம்.

- Advertisement -

சஷ்டி விரதம் என்பது தொடர்ந்து 6 நாட்கள் இருக்கக்கூடிய விரதம். 7 வது நாள் முருகரின் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து ஆறு நாட்கள் விரதத்தை இருக்க முடியாதவர்கள், முருகரின் திருக்கல்யாணம் நடைபெற கூடிய ஏழாவது நாள் ஒரே ஒரு நாள் கூட விரதத்தை இருக்கலாம் தவறு கிடையாது.

குறிப்பாக குழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் இந்த விரதத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். முடிந்தால் கணவன் மனைவி சேர்ந்து இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். முடியாதவர்கள் அவரவர் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். மனைவி மட்டும் விரதம் இருந்தாலும் தவறு இல்லை. கணவர் மட்டும் விரதம் இருந்தாலும் தவறு இல்லை.

- Advertisement -

தினம் தினம் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, முருகப்பெருமானுக்கு முன்பு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த விரத நாளை தொடங்க வேண்டும். காலையிலேயே முடிந்தால் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். அப்படி இல்லை என்றால் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க விட்டு காதால் கேட்கலாம். இதோடு சேர்த்து முருகப்பெருமானின் மூல மந்திரத்தை மூன்று முறை மட்டுமாவது உச்சரிக்க வேண்டும். இதோ உங்களுக்காக முருகப்பெருமானின் மூலமந்திரம்.ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ

இதையும் படிக்கலாமே: பணம் உங்க கையில் இருந்துட்டே இருக்கணும்னு நினைக்கிறவங்க, இந்த பொருளை உடனே வாங்கி வச்சிக்கோங்க..

ஆறு நாட்களும் முழுமையாக எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருப்பவர்களும் இருக்கலாம். அப்படி இல்லை வெறும் பழம் பால் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். ஒருவேளை பலகாரம் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். மனசுதாங்க முக்கியம். முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு மேல் சொன்ன விஷயங்களும் விதிமுறைகளும் மந்திரங்களும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உண்மையான பக்தியும் முக்கியம். உண்மையான பக்தியோடு முருகப்பெருமானை ‘ஓம் முருகா’ என்று சொல்லி மனதார வழிபாடு செய்தாலும் அது உங்களுக்கு முழுமையான பலனை கொடுக்கும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -