மீந்த சாதத்தில் தண்ணி ஊத்தி வச்சா நொந்து போகுதா? அப்படின்னா சாதம் வடிக்கும் போது இந்த ஒரு ட்ரிக்ஸ் பாலோ பண்ணுங்க ரெண்டு நாள் ஆனாலும் பழைய சாதம் நொந்து போகாம கஞ்சி குடிக்க நல்லா இருக்கும்.

left over rice
- Advertisement -

இப்போதுள்ள தலைமுறையினருக்கு பழைய சாதம் என்றால் என்னவென்று தெரிந்து இருக்கக் கூட வாய்ப்பு குறைவு தான். நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் இருந்தே இரவு மீந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அதை அடுத்த நாளில் தயிர் ஊற்றி கரைத்து குடிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார்கள். இந்த பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்களுக்கு நிகர் வேறு எதிலும் கிடையாது.

அந்தக் காலத்தில் உள்ளவர்கள் எல்லாம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்ததற்கு இந்த பழைய சாதம் ஒரு முக்கிய காரணமாகவே சொல்லப்படுகிறது. இப்போது எல்லாம் சாதம் இருந்தால் அதை யாரும் இப்படி தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது கிடையாது. ஒரு புறம் இது யாருக்கும் பிடிப்பதில்லை என்ற காரணமாக இருந்தாலும் இன்னொரு புறம் தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் பார்த்தால் சாதம் நொந்து போய் நன்றாகவே இருப்பதில்லை. அப்படியான சாதத்தை சாப்பிடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

- Advertisement -

இனி நீங்க எப்ப சாதம் வடிச்சாலும் இந்த ஒரு ட்ரிக்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணி பாருங்க. இந்த சாதத்துல தண்ணி ஊத்தி வச்சா ரெண்டு நாள் ஆனாலும் சாதம் கெட்டுப் போகாம நல்லா உதிரி உதிரியா கஞ்சி குடிக்க நல்லா இருக்கும். வாங்க அது என்ன ட்ரிக்ஸ் அப்படின்னு இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம தெரிஞ்சுக்கலாம்.

பழைய சாதம் நொந்து போகாமல் இருக்க
பழைய சாதம் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் குக்கரில் சாதம் வடிப்பதை தவிர்க்க வேண்டும். குக்கரில் சாதம் வடித்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்தால் நொந்து போகாமல் வைத்திருக்க முடியாது. எனவே குக்கரில் வடிக்காமல் பாத்திரத்தில் சாதம் வடிப்பது மிகவும் நல்லது. இது பழைய சாதத்திற்காக மட்டுமல்ல நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு இது தான் நல்லது.

- Advertisement -

அதே போல் சாதம் வடிக்கும் போது அதில் கொஞ்சம் உப்பு போட்டு வடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் சாதம் கெட்டுப் போகாமல் அதிக நேரம் நன்றாக இருக்கும். சாதம் வடித்த பிறகு அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து விடுங்கள். வடித்த பாத்திரத்திலே அப்படியே வைத்து மூடி போட்டு வைக்கும் போது அதிலிருந்து நீர் விட்டு அந்த நீர் சாதத்தில் இறங்கி சீக்கிரம் நொந்து போக வாய்ப்பு உண்டு.

இனி நீங்கள் சாதம் வடிக்கும் போது சாதம் வடித்து மீதம் இருக்கும் கஞ்சி தண்ணீரை கீழே ஊற்றாமல் தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். இரவு சாதம் மீந்த பிறகு நீங்கள் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் இந்த கஞ்சி தண்ணீரின் மேலே ஆடை போல படிந்திருக்கும் அதை எடுத்து தூர போட்டு விடுங்கள். மீதம் இருக்கும் கஞ்சி தண்ணீரில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை மீந்த சாதத்தில் ஊற்றிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதை செய்யும் போது சாதம் கெட்டுப் போகாமல் மறுநாள் கஞ்சி குடிக்கும் போது கூட சாதம் நன்றாக இருக்கும். சாதம் நொந்து போய் புளித்து போகாமல் இருக்கவும் இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க. அதுமட்டுமின்றி வாய்ப்பு இருப்பவர்கள் இரவில் இப்படி தண்ணீர் ஊற்றி வைக்கும் சாதத்தை மண்பானையில் ஊற்றி வைத்து அதன் மீது மூடும் தட்டை கொஞ்சமாக திறந்தபடி வைத்து விட்டு அந்த தண்ணீரை குடித்தால் இதில் அத்தனை சத்துக்கள் இருக்கிறது. உடல் அதிக குளிர்ச்சி தன்மை உள்ளவர்கள் சைனஸ் பிராப்ளம் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: வீடு துடைத்த பிறகு, பூத கண்ணாடியை வைத்து தேடினாலும், தரையில் இனி ஒரு அழுகை கூட கண்டுபிடிக்க முடியாது. ஒருமுறை சீப்பை வைத்து வீடு துடைச்சு தான் பாருங்களேன்.

இந்தப் பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால் இனி நீங்களும் இந்த சாதத்தை வீணாக்காமல் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -