வீடு துடைத்த பிறகு, பூத கண்ணாடியை வைத்து தேடினாலும், தரையில் இனி ஒரு அழுகை கூட கண்டுபிடிக்க முடியாது. ஒருமுறை சீப்பை வைத்து வீடு துடைச்சு தான் பாருங்களேன்.

cleaning
- Advertisement -

நம்முடைய எல்லோர் வீட்டிலும் பெரும்பாலும் இப்போது டயல்ஸ் தான் ஒட்டி இருக்கின்றோம். அதிலும் அழுக்கு நன்றாக வெளியில் தெரியும் படி நிறைய பேர் வீடுகளில் வெள்ளை நிறத்தில், சேண்டல் நிறத்தில் டயல்ஸ் ஒட்டி வைக்கிறார்கள். நாம் என்னதான் மாப் போட்டு வீடு முழுவதும் துடைத்து எடுத்தாலும், இந்த சுவர் ஓரங்களிலும், டைல்ஸ் இடுக்குகளில் மட்டும் கருப்பு கருப்பாக அழுக்குகள் படிந்திருக்கும். அந்த அழுக்கை சுலபமாக எப்படி நீக்குவது என்பதை பற்றி தான் இந்த குறிப்பில் பார்க்கப் போகின்றோம்.

டைல்ஸ் கார்னரை சுத்தம் செய்ய புது ஐடியா:
டைல்ஸ் கார்னர் சுவரை ஒட்டி இருக்கக்கூடிய பகுதி, ஒரு டைல்ஸ்க்கும் இன்னொரு டயலஸ்க்கும் நடுவே ஒரு கோடு போல இருக்கும் அல்லவா, அந்த இடத்தில் படிந்து இருக்கும் அழுக்கை நீக்கவும் இந்த குறிப்பு பயன்படும். இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் ஒரு பழைய சாக்ஸ், ஓரளவுக்கு பழைய பெரிய சீப்பு, கொஞ்சமாக பல் தேய்க்கும் பேஸ்ட்.

- Advertisement -

முதலில் பேஸ்டை எடுத்து டைல்ஸ் கார்னரில் அல்லது இரண்டு டைல்ஸுக்கும் நடுவே இருக்கக்கூடிய இடத்தில், எந்த இடத்தில் ரொம்பவும் அழுக்கு படிந்து இருக்கிறதோ அந்த இடத்தில் தடவி விடுங்கள். அது ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் ஊறட்டும். இதற்குள் பழைய சாக்ஸை எடுத்து, அதற்கு உள்ளே ஒரு சீப்பை போட்டு முடிச்சு போட்டுக் கொள்ளவும். அப்போது தான் ஷாக்சை விட்டு சீப்பு வெளியே விழாது.

இப்போது தரையில் அழுக்கு இருக்கும் இடத்தில் பேஸ்டை தடவி வைத்திருக்கிறோம் அல்லவா அந்த இடத்தில் லேசாக தண்ணீரை ஸ்பிரே செய்து கொள்ளுங்கள்.  இப்போது தயாராக வைத்திருக்கும், சீப்பு போட்டு வைத்திருக்கும் சாக்ஸை எடுத்துக் கொள்ளுங்கள். சீப்பின் பல் பகுதி ஷாப்புக்கு உள்ளே இருக்கும் அல்லவா. அதை அப்படியே அந்த டைல்ஸ் கார்னரில் வைத்து தேய்த்து கொடுத்தீர்கள் என்றால் டைல்ஸ் கார்னரில் இருக்கும் அழுக்கு எல்லாம் ஒரு நொடி பொழுதில் சுத்தமாகிவிடும்.

- Advertisement -

சீப்பை கார்னரில் வைத்து தேய்க்கும் போது அந்த ஷாட்சில் எல்லா அழுக்கும் மொத்தமாக ஒட்டி சுலபமாக சுத்தமாகி விடும். நீங்கள் வீட்டை மாப் போடுவதற்கு முன்பு கார்னரை எல்லாம் ஒரு முறை இப்படி சுத்தம் செய்து கொள்ளுங்கள். மாதத்திற்கு ஒரு முறையோ, இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ இந்த டிப்சை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்தால் உங்கள் டைல்ஸ் எப்போதும் மூளை முடுக்குகளில் கூட கருப்பு நிறத்தில் அழுக்கு படியாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கொசு தொல்லையா அப்படின்னா என்ன? இப்படி கேட்கும் அளவுக்கு கொசுவே உங்களை நெருங்காமல் இருக்க ஒரு சூப்பரான டிப்ஸ் இதோ உங்களுக்காக.

குறிப்பாக இந்த அழுக்கு அதிகமாக எங்கே இருக்கும் தெரியுமா. சமையல் அறையில், சமையல் மேடைக்கு கீழே, பிரிட்ஜுக்கு பின்பக்கம், வாஷிங் மெஷினுக்கு பின்பக்கம், பீரோவுக்கு பின் பக்கம், சோபாவுக்கு பின்பக்கம் என்று எந்த இடத்தில் எல்லாம் நீங்கள் நகர்த்தாமல் பெரிய பெரிய பொருட்களை வைத்திருக்கிறீர்களோ, அந்த இடத்திற்கு பின்னால் எல்லாம் இப்படிப்பட்ட அழுக்குகள் நிறைய படிந்து இருக்கும். உங்களுடைய வீட்டில் கவனித்து பாருங்கள். நிச்சயமாக இந்த சின்ன வீட்டு குறிப்பு உங்கள் வீட்டை சுத்தம் செய்வதற்கு கட்டாயம் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -