வீட்டில் இந்த மாத்திரைகள் எல்லாம் இருந்தால் தூக்கிப் போடாதீங்க! இலையே இல்லாமல் குச்சி மட்டும் இருந்தாக் கூட ரோஜா செடி துளிர்க்க ஆரம்பித்து விடும்!

- Advertisement -

உடம்பு சரி இல்லை என்று ஆஸ்பத்திரிக்கு போனா பட்டை பட்டையாக சத்து மாத்திரைகளைக் கொடுத்து அனுப்புவார்கள். அது தீரும் வரை முழுமையாகத் திண்போமா? என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது. ரெண்டு வேலை மாத்திரை சாப்பிடுவோம், உடம்பு சரியானதும் மாத்திரை அட்டைகளை அப்படியே ஓரமாக தூக்கிப் போட்டு விடுவோம். இப்படி சத்து மாத்திரைகள் வீட்டில் இருந்தால், அது என்ன மாத்திரை? என்று தெரிந்து கொண்டு இதை செய்தால் துளிர்க்காத செடியும் துளிர்க்க ஆரம்பிக்கும். எந்த மாத்திரைகளை எப்படி செடிக்கு பயன்படுத்துவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

மாத்திரையாக பயன்படுத்தும் பொழுது பூச்செடிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். காய்கறி மற்றும் பழ வகையான செடிகளுக்கு கண்டிப்பாக இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பூக்காத பூச் செடிகள் பூத்துக் குலுங்க செய்யும் இந்த மாத்திரையில் இருக்கும் சத்துக்கள் சரியான முறையில் கொடுக்கும் பொழுது சரியாக போய் சேர்ந்தடையும்.

- Advertisement -

அதிகப்படியாக கொடுத்தால் மண்ணில் இருக்கும் மண் புழுக்களை அழித்து விடும் எனவே கவனம் தேவை. நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியும் வைட்டமின் மாத்திரைகளை சேகரித்து வைத்துக் கொண்டால் மாதம் ஒரு முறையாவது செடிகளுக்கு இது போல உரமாக கொடுக்கலாம். சிலர் ஆசை ஆசையாக வாங்கி வைத்த ரோஜா செடிகள் ஒரு இலை கூட இல்லாமல் வெறும் குச்சிகளுடன் நின்று கொண்டிருக்கும்.

இப்படி இலைகள் இல்லாமல் குச்சி மட்டுமே இருந்தால் கூட இந்த ஒரு உரத்தை நீங்கள் கொடுக்கும் பொழுது மீண்டும் அதிலிருந்து துளிர்க்கும் அற்புதம் நடக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த இந்த சத்துக்கள் மனித உடலுக்கு மட்டும் அல்லாமல், பூச்செடிகளும் நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுக்க வல்லது. பூக்காத பூச்செடிகள் துளிர்த்து வளர வேண்டுமென்றால் அதற்கு வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள மாத்திரைகளை கொடுக்க வேண்டும்.

- Advertisement -

ஆஸ்பிரின் மாத்திரைகளை கூட இவ்வகையான பூச்செடிகளுக்கு பயன்படுத்தலாம். பொதுவாக ஏழு இலைகள் கொண்ட கிளை ரோஜா செடியில் இருக்கக் கூடாது, அதை வெட்டி விட சொல்லுவார்கள். ஏழு இலைகள் கொண்ட கிளை ஓரிரண்டு இருந்தால் அதை கத்தரித்து விடுங்கள். அப்படி அல்லாமல் செடி முழுவதுமே ஏழு இலைகள் கொண்டதாக இருந்தால் இந்த ஒரு உரத்தை கொடுத்தால் செடிகள் மீண்டும் நல்ல முறையில் வளர ஆரம்பிக்கும். இலைகள் இல்லாத செடிகள் மற்றும் ஏழு இலைகள் கொண்ட ரோஜா செடிகளுக்கும் உடன் இதர பூக்கள் பூக்கும் மற்ற செடிகளுக்கும் கொடுக்க வேண்டிய இந்த உரத்தை எப்படி தயாரிப்பது?

5 முதல் 10 லிட்டர் அளவிலான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்று முதல் இரண்டு வரையிலான மாத்திரைகளை மட்டும் கரைத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் ஊறிய பிறகு இந்த தண்ணீரை காய்ந்த அந்த செடிகளில் இருக்கும் குச்சிகளின் மீது ஊற்ற வேண்டும். குச்சிகளின் முனையில் ஆங்காங்கே லேசாகக் கத்தரித்து கொள்ளுங்கள். பிறகு இதை ஊற்றி ஊற விட்டு விடுங்கள். இவ்வாறு 10 நாட்களுக்கு ஒரு முறை செய்ய இரண்டு மாதத்திற்குள் பூக்காத செடி நன்கு பூக்க ஆரம்பித்துவிடும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -