சங்கடஹர சதுர்த்தி நாட்கள் 2019

Lord Ganesh

மாதாமாதம் பிள்ளையாருக்கும் மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது சதுர்த்தி தினமே. இந்த நன்னாளில் விரதம் இருந்து பிள்ளையாரை வழிபட்டால் நமது சங்கடங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் 2019 ஆண்டின் சதுர்த்தி நாட்கள் மாதா மாதம் எப்போது வருகிறது என்று கீழே உள்ள அட்டவணையில் பார்ப்போம்.

Pillayar

Sankatahara sathurthi dates 2019

DateDay
24 January 2019Thursday
22 February 2019Friday
24 March 2019Sunday
22 April 2019Monday
22 May 2019Wednesday
20 June 2019Thursday
20 July 2019Saturday
19 August 2019Monday
17 September 2019Tuesday
17 October 2019Thursday
15 November 2019Friday
15 December 2019Sunday

Sashti 2019  Ashtami 2019  Navami 2019

மாதாமாதம் சதுர்த்தி நாட்கள் வரும் ஆனால் சங்கடஹர சதுர்த்தி என்பது மாசி மாதம் தேய்பிறையில் வரும் இந்த சதுர்த்திநாளை நாம் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். இந்த மாசி மாதம் விநாயகருக்கு உகந்த மாதம். எனவே இந்த மாதத்தில் நாம் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை மேற்கொள்கிறோம். சங்கடஹர விரதத்தினை மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்களை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பொதுவாக சதுர்த்தி நாட்களில் காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் துவங்கி சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வரை உணவு எதையும் உட்கொள்ளாமல் [சாப்பிடாமல்] சதுர்த்தி நாட்களில் நாம் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் நமக்கு நன்மைகள் நடைபெறும் . மாலையில் விநாயகரை வழிபட்டு பிறகு சந்திரனையும் வழிபடலாம். சதுர்த்தி நாளின் விரதத்தினை முடிக்கும் போது எதாவது இனிப்பு வகையினை உண்டு முடித்துக்கொள்ளலாம்.

Pillayar

சங்கடஹர சதுர்த்தி மேற்கொள்ளும் முறை : சங்கடஹர சதுர்த்தி மாசிமாதம் தேய்பிறையில் செவ்வாய் கிழமை அன்று துவங்கும் அதிலிருந்து சரியாக ஒருவருடம் அந்த விரதத்தினை நீங்கள் மாதமாதம் விநாயகருக்காக மேற்கொள்ளவேண்டும் . அவ்வாறு மேற்கொண்டால் வரும் பலன்கள் குறித்து தெரிந்துகொள்ள கீழே படியுங்கள்.

சங்கடஹர சதுர்த்தி பலன்கள் :

முறைப்படி ஒருவருடம் நீங்கள் ஒரு மாதம் கூட தவறாமல் சரியான முறையில் இந்த விரதத்தினை நீங்கள் மேற்கொண்டால் உங்களின் கஷ்டங்கள் முழுவதும் நீங்கும். பின்பு நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும்.

Pillayar

“எண்ணிய எண்ணம் எல்லாம் கிட்டும்” என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களது நிலை முன்னேறும். நீங்கள் தேடும் செல்வங்கள் கிட்டும். உங்களின் செல்வாக்கு மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு உயரும். மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

English Overview:
Here we have Sankatahara sathurthi dates 2019. It is also called as Chaturthi 2019 dates. Sankatahara Chaturthi is a famous day on which people will worship lord Ganesh. It covers Sangadahara Sathurthi in January 2019, Sangadahara Sathurthi in February 2019, Sangadahara Sathurthi in March 2019, Sangadahara Sathurthi in April 2019, Sangadahara Sathurthi in May 2019, Sangadahara Sathurthi in June 2019, Sangadahara Sathurthi in July 2019, Sangadahara Sathurthi in August 2019, Sangadahara Sathurthi in September 2019, Sangadahara Sathurthi in October 2019, Sangadahara Sathurthi in November 2019 and Sangadahara Sathurthi in December 2019.