சனிப்பெயர்ச்சி 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

perumal Sanibhagavan
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் 12 ராசிக்காரர்களுக்கும் பாதகமான சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்று 20 12 2023 மாலை 5:20 மணி அளவில் சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம் 12 ராசிக்காரர்களும் பலவிதமான பலன்களை பெறுவார்கள். இந்தப் பெயர்ச்சியினால் எந்த பாதிப்பையும் அடையாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளை பற்றி ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள்

பொதுவாக சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் என்றாலே அனைவருக்குள்ளும் ஒரு வித அச்சம் ஏற்படும். சனிபகவான் ஒருவருடைய ராசிக்குள் வரும் பொழுது அவர்களுடைய பாவ புண்ணியங்களை கணக்கிட்டு தான் அவர் பலன் அளிப்பார. அன்றி சனி பகவான் கெடுதல் விளைவிப்பதற்காகவே நம்மை துன்பப்படுத்துவதில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

சனிபகவானின் இந்த பெயர்ச்சியானது மகரத்தில் இருந்து கும்பத்திற்கு மாறுகிறார். மகரம் கும்பம் இரண்டுமே சனி பகவானின் சொந்த வீடாக கருதப்படுகிறது. ஒருவர் தன் சொந்த வீட்டில் இருக்கும் போது நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பார். ஆகையால் இந்தப் பெயர்ச்சி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருந்தாலும் நாம் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளையும் செய்யும் செய்யும் போது மேலும் நல்ல பலன்களை பெற முடியும்.

முதலில் சனீஸ்வரர் ஒரு ராசிக்குள் நுழைந்து விட்டார் என்றால் அவர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை மந்த நிலை. ஆகையால் தான் இவருக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு. இப்படியானவர்கள் எப்போதும் சோர்வான நிலையிலும் எந்த காரியத்தை தள்ளிப் போடும் மனநிலையிலும் இருப்பார்கள். முதலில் அதை தவிர்க்க வேண்டும். இதற்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தீபம் ஏற்று இறைவனை வழிபடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தது சனீஸ்வர பகவானுக்கு மிகவும் பிடித்தவர்கள் என்றால் உடல் ஊனமுற்றவர்கள் முதியவர்கள். இவர்களுக்கு நாம் செய்யக் கூடிய சிறு சிறு உதவிகள் கூட சனி பகவானின் பெரிய அருளை நமக்கு பெற்றுத் தரும். ஆகையால் 12 ராசிக்காரர்களின் சனி பகவானுக்கு பிடித்த இவர்களுக்கு ஏதேனும் ஒரு உதவிகளை எப்போதும் செய்யுங்கள். சனியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

அடுத்ததாக காக்கைக்கு எள் சாதம் வைப்பதையும் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் சனிக்கிழமைகளில் எள் சாதம் செய்து நவகிரகங்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு படைத்து ஆலயத்திற்கு வருபவர்களுக்கு தானமாக கொடுங்கள். இது உங்களுடைய கர்மாவை பெரும் அளவு குறைக்கும். மேலும் சனிக்கிழமைகளில் நவகிரகத்தை 108 முறை வலம் வருவது அதிக பலனை கொடுக்கும்.

- Advertisement -

இத்துடன் சனிக்கிழமைகளில் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவது சனியின் அருளை பெற்று தரும். ஏனெனில் சனி கிரகத்தின் அதி தேவதையாக இருப்பவர் பெருமாள். இவரை வழிபட்டால் நிச்சயம் சனி அருள் நமக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி வியாழன் அல்லது சனி இந்த இரண்டு தினங்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவதும் விநாயகருக்கு தினமும் தீபம் ஏற்றி வழிபடுவதும் சனி பகவானின் அருளை பெற்று தரும்.

சனிப்பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விலக 12 ராசிக்காரர்களும் இந்த எளிய பரிகார முறைகளை பின்பற்றலாம். இதில் பாதகம் உள்ள ராசிக்காரர்கள் பாதகம் இல்லாதவர்கள் என அனைவரும் செய்யலாம். பாதகம் உள்ளவர்கள் அவர்களுடைய இந்த பெயர்ச்சி காலம் முடியும் வரை தொடர்ந்து செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்கள் வராமல் இருக்க பரிகாரம்

சனிபகவானின் பெயர்ச்சியால் இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பமே நாம் முன்பு செய்த நன்மை தீமைகளின் பலன் தான். ஆகையால் எப்போதும் நாம் நன்மைகளை மட்டுமே செய்து நல்ல முறையில் வாழும் போது எந்தவித பெயர்ச்சியின் போதும் நாம் துளியும் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

- Advertisement -