கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள மிக பெரிய அறிவியல்

kovil-mani
- Advertisement -

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கு பின்பும் ஒரு அறிவியல் ஒளிந்துள்ளது. இதற்கு மிக சிறந்த உதாரணம் நாம் கோவிலில் அடிக்கும் மணி. கோவில் மணிக்கு பின் என்ன அறிவியல் ஒளிந்திருக்க முடியும் என்று நினைகிறீர்களா? வாருங்கள் இதை பற்றி விரிவாக பாப்போம்.

kovil mani

கோவில் மணிகள் சாதாரண உலோகத்தினால் செய்யப்படுவதல்ல. கேட்மியம்(தகர உலோக வகை), ஜின்க், ஈயம், தாமிரம், நிக்கல், க்ரோமியும், மற்றும் மாங்கனீசு போன்ற பல உலோகத்தின் கலவையால் செய்யப்படுவது.

- Advertisement -

கோவில் மணியை உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகத்தின் விகிதத்திற்கு பின்னணியில் அறிவியல் அடங்கியுள்ளது. ஒவ்வொரு முறை மணி அடிக்கப்படும் போதும், ஒவ்வொரு உலோகத்தில் இருந்து தனித்துவமான ஒலி ஏற்படும் வகையில் ஒவ்வொரு உலோகமும் கலக்கப்பட்டிருக்கும்.

இந்த தனித்துவமான ஒலிகளால், நம் இடது மற்றும் வலது மூளையில் ஒற்றுமை உண்டாக்கும். அதனால் மணி ஒலிக்க தொடங்கிய அடுத்த நொடியிலேயே கூர்மையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்க கூடிய சத்தம் எழும். இந்த சத்தம் 7 நொடிகள் வரை நீடிக்கும்.

- Advertisement -

kovil mani

மணியோசையில் இருந்து வரும் எதிரொலி, நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தொடும். அதனால், மூளையின் வாங்குந்தன்மையும், உணர்வு திறனும் தீவிரமடையும். அதனால் தான் கருவறைக்கு செல்லும் முன் மணியை அடித்துவிட்டு செல்கிறோம்.

இதையும் படிக்கலாமே:
குலதெய்வ வழிபாட்டின் அற்புத பலன்களும் குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறையும்.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், ஆன்மீக கதைகள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -