எந்தவிதமான சிக்கல்களிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமா? அருகம்புல் பரிகாரம்.

swarna ganapathy

நம்முடைய வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் முழு முதற்கடவுளான விநாயகரை முதலில் வணங்க வேண்டும். எந்த ஒரு செயல்பாட்டிலும் தடங்கல்கள் வராமலிருக்க விநாயகர் வழிபாடு சிறந்தது. அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ பண பரிமாற்றங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்படும். அதில் சில பரிமாற்றத்தின் போது தீர்க்க முடியாத சிக்கல்களில் போய் சிக்கி இருப்போம். அல்லது நம்முடைய பணம் வேறு எவர் கையிலாவது போய் மாட்டிக்கொண்டு இருக்கும். கொடுத்த கடன் தொகையானது வசூல் ஆகி இருக்காது. இப்படி பல வகைப்பட்ட, பலவிதமான பிரச்சனைகள் நம் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இருக்கும். இப்படிப்பட்ட சிக்கல்களை தீர்க்க நாம் என்ன செய்யலாம்? சொர்ண கணபதியை மனதார நினைத்து, அருகம்புல்லை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

arugampul juice

முதலில் கால் படாத இடத்தில் பசுமையாக வளர்ந்திருக்கும் அறுகம்புல்லை உங்கள் கைகளாலேயே பறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவுள்ள அருகம்புல். அதை நன்றாகக் கழுவி மஞ்சளின் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது மஞ்சளை சிறிது தண்ணீர் தெளித்து, அருகம்புல்லை அதில் போட்டு அருகம் புல்லில் மஞ்சள் ஒட்டும் படி செய்தால் போதும். அடுத்ததாக பூக்கட்டும் வெள்ளை நூலை ஒன்பது இழைகளாக மடித்து தயார் செய்து கொள்ள வேண்டும். அதையும் மஞ்சளில் நினைத்து, மஞ்சள் நூலாக மாற்றிக் கொள்ளவும். ஒரு விரலி மஞ்சளை எடுத்து, தயார் செய்து வைத்துள்ள ஒன்பது இழை நூலின் நடுப்பகுதியில் கட்டிவிட வேண்டும். காப்பு கட்டுவதற்காக தயார் செய்வோம் அல்லவா அந்த முறைப்படி.

இறுதியாக ஒரு தாம்பூல தட்டில் மஞ்சள் பொடியை கொட்டி கொள்ள வேண்டும். மஞ்சள் நூலில் தயார் செய்து வைத்திருக்கும் அந்த காப்புக் கயிறை எடுத்து, கைப்பிடி அளவு எடுத்து வைத்திருக்கும் அருகம்புல் கட்டில் மூன்று முடிச்சுகளைப் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். காப்பு கட்டி வைத்திருக்கும் அருகம்புல் கட்டை, மஞ்சள்பொடி கொட்டி வைத்திருக்கும் தாம்புல தட்டில் மீது நிற்கும்படி வைக்க வேண்டும். செங்குத்தாக நிற்க வேண்டும். அருகம்புல்லை படுக்க வைக்க கூடாது. இப்படி தயார் செய்து வைத்திருக்கும் அருகம்புல்லை சொர்ணகணபதி விநாயகராக பாவித்து 11 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

Arugampul juice benfits Tamil

11 நாட்களும் சுத்தபத்தமாக குளித்துவிட்டு விரதம் மேற்கொள்வது நல்லது. சைவ சாப்பாடு மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்தப் பூஜையை நீங்கள் தொடங்கும் நாள் சங்கடஹர சதுர்த்தி தினமாக இருக்க வேண்டும். சங்கட சதுர்த்தி தினத்தில் இருந்து தொடர்ந்து பதினோரு நாட்கள் இந்த அருகம்புல்லுக்கு பூக்களால் 108முறை அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனையின் போது ‘ஓம் சொர்ண கணபதியே நம’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நல்லது. இந்தப் பூஜையை காலை வேளையிலும் செய்யலாம் மாலை வேளையிலும் செய்யலாம். உங்களது பூஜையை நல்லபடியாக 11 நாட்கள் முடித்துவிட்டு, அந்த அறுகம்புல் கட்டை உங்கள் வீட்டு வாசல் படியில் மாட்டி வைத்து விட்டால், உங்களுக்கு பண பரிமாற்றத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைந்துவிடும். அந்த அறுகம்புல் வாடியிருக்கும் இருந்தாலும் பரவாயில்லை. அதை உங்கள் நில வாசல்படியில் மாட்டி வைத்து விடுங்கள்.

- Advertisement -

Lord Ganesh

வெறும் பணத்திற்கான தடைகள் மட்டும் அல்ல, வீட்டில் சுப காரிய தடை, தொழில் செய்வதில் தடை,  எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த அருகம்புல்லை உங்கள் வாசலில் மாட்டிய ஒரு மாதத்திற்குள் நல்ல மாற்றம் ஏற்படுவதை உங்களால் நிச்சயமாக உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
மகாலட்சுமியின் அருளைப் பரிபூரணமாகப் பெற சோழியை வீட்டில் எப்படி வைத்துக் கொள்ளலாம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Arugampul. Arugampul in Tamil. Arugampul palangal. Arugampul vinayagar.