இனி இதையெல்லாம் சுத்தம் செய்த தண்ணீரை கீழே ஊற்றாமல் பூ செடிகளுக்கு ஊற்றிப் பாருங்கள். உங்கள் பூ செடிகள் காடு போல வளர்ந்து கொத்துக் கொத்தாக பூ, பூக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

வீட்டில் வண்ண வண்ண நிறங்களில் பூச்செடிகள் வைத்திருப்பது பார்க்க கண் கொள்ளா காட்சிகளாக தான் இருக்கும். ஆனால் அதற்காக கொஞ்சம் மெனக்கெட தான் வேண்டும். அதற்கென நேரம் ஒதுக்கி பராமரித்து அதற்கான உரங்களை சரியான முறையில் தேர்வு செய்து, சரியான நேரத்தில் கொடுத்தோம் என்றால் பூச்செடிகள் பூக்கும் அழகை பார்க்க கண்கள் இரண்டு போதாது. இப்படி பூக்கும் இந்த செடிகளுக்கு நாம் வீட்டில் தேவை இல்லை என கழுவி கீழே ஊற்றும் தண்ணீரை உரமாக மாற்றலாம் என்றால் உடனே அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் தோன்றத் தானே செய்யும் அது எந்தெந்த தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பு தான் இந்த பதிவு.

பால் காய்ச்சிய பிறகு அந்த பாத்திரத்தின் ஓரங்களில் பால் கொஞ்சம் காய்ந்து பிடித்திருக்கும் அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பிறகு சோப்பு எதுவும் போட்டு தேய்க்காமல் வெறும் நார் மட்டும் வைத்து தேய்த்த பின் அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம். இதே போல டீ போட்ட பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். டீ போடும் போது அதில் சர்க்கரை சேர்த்து இருந்தாலும் பரவாயில்லை டீ வடிகட்டிய பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறிய பின் கழுவி செடிகளுக்கு ஊற்றலாம்.

- Advertisement -

முட்டை வேக வைக்கும் போது பெரும்பாலும் அதில் உப்பு சேர்த்து வேக வைப்பார்கள். அதைப் போல உப்பு ஏதும் சேர்க்காமல் வெறும் முட்டையை மட்டும் வேக வைத்து அந்த தண்ணீரை கூட ஆற வைத்து செடிகளுக்கு ஊற்றி வரலாம்.

அடுத்தது மீன் கழுவிய தண்ணீர், மீனை கழுவிய முதல் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து இரண்டு நாள் வரை வைத்து விட வேண்டும். இது கொஞ்சம் வாடை அதிகம் வரும். ஆனால் செடிகளுக்கு இதன் மூலம்அதிக ஊட்டச்சத்து கிடைக்கும் புதிய மொட்டுக்களும் தளிர் அதிகம் வைக்கும் வாய்ப்பு இந்த தண்ணீர் ஊற்றும் போது கிடைக்கும்.

- Advertisement -

எலுமிச்சை பழ தோலை தண்ணீரில் ஊற வைத்த பிறகு அந்த தண்ணீரை மட்டும் எடுத்து செடிகளுக்கு ஊற்றி வரலாம். தோலை நீங்கள் கம்போஸ்ட்டு தயாரிக்கும் டஸ்பினில் போட்டு விடுங்கள். தோலும் வீணாகாது தோல் ஊறிய தண்ணீரும் செடிகளுக்கு நல்ல உரம் ஆகும்.

அதே போல் காப்பி தூள் தண்ணீரில் கலந்து அதையும் கொடுக்கலாம். இதற்காக நீங்கள் காப்பித்தூள் வாங்கி கலக்க வேண்டும் என்று இல்லை காபித்தூள் வாங்கி நீங்கள் பயன்படுத்திய பிறகு அந்தக் கவரை தண்ணீரில் போட்டால் அந்த கவரில் ஒட்டி இருக்கும் காபித்தூள் எல்லாம் தண்ணீரில் இறங்கி விடும். இதைக் கூட வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றி விடலாம்.

- Advertisement -

இந்த போல் செடிகளுக்கு பூச்சிகள் அரிக்காமல் இருக்க இந்த முறை பயன்படுத்தலாம் ஆனால் அதிகம் பயன்படுத்தி விடக்கூடாது அது சுண்ணாம்பு தான். சுண்ணாம்பு ஒரே ஒரு சிட்டிகை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு ஒரு செடிகளுக்கும் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஊற்றினால் கூட போதும் சுண்ணாம்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.

வீட்டில் நீங்கள் வாழைப்பூ சமைக்கும் போது அதன் மேலே உள்ள பெரிய தோல் சிகப்பு நிறத்தில் இருக்கும் அல்லவா அந்த தோலை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் சேர்த்து ஊற வைத்து அந்த தண்ணீரை ரோஜா செடிகளுக்கு ஊற்றும் போது செடியில் பூக்கள் பெரியதாக பூக்கும் அது மட்டுமல்லாமல் பூக்களுக்கும் நல்ல நிறத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: செடிகள் பூ வைத்து காயாகும் முன்பே பூக்கள் உதிர்ந்து போய் விடுகிறதா? இந்த உரத்தை உங்கள் செடிகளுக்கு கொடுத்துப் பாருங்கள். செடியில் வைத்த பூக்கள் அத்தனையும் காயாகும் அதிசயத்தை பார்ப்பீர்கள்.

மேற்கூறிய அனைத்து குறிப்புகளுமே நம் வீட்டில் வேண்டாம் என்று கழுவி கீழே ஊற்றும் தண்ணீரை வைத்து தான் செடிகளுக்கு நல்ல உரமாக எப்படி பயன்படுத்துவது என்று கூறியுள்ளோம் செடி வளர்ப்பு பொருட்கள் இனி இது போன்ற செலவில்ல உரங்களையும் பயன்படுத்தி பயனடையுங்கள்.

- Advertisement -