செடிகள் பூ வைத்து காயாகும் முன்பே பூக்கள் உதிர்ந்து போய் விடுகிறதா? இந்த உரத்தை உங்கள் செடிகளுக்கு கொடுத்துப் பாருங்கள். செடியில் வைத்த பூக்கள் அத்தனையும் காயாகும் அதிசயத்தை பார்ப்பீர்கள்.

- Advertisement -

பூச்செடிகள் வைத்து வளர்ப்பதற்கு நிறைய உரங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம் பார்த்திருப்போம். ஆனால் காய் தரும் செடிகளும் கொடிகளும் அதாவது இந்த தர்பூசணி, வெள்ளரி, புடலங்காய், போன்ற கொடிகள் சின்ன சின்ன காய் செடிகள் மிளகாய் கத்தரிக்காய் வெண்டைக்காய் போன்ற செடிகள் எல்லாம் காய் வைப்பதற்கு முன்பு பூ வைக்கும். ஒரு சில செடிகள் வைத்து வெகு நாளானாலும் ஒன்று, இரண்டு பூக்கள் தான் வைக்கும் பூ வைத்தாலும் அனைத்தும் காய் வைக்காது. செடிகள் அதிக அளவில் பூ வைக்கவும் வைத்த பூக்கள் அனைத்துமே காயாகவும் நாம் இந்த கரைச்சலை செடிகளுக்கு கொடுக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். அது என்ன உரம் எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது என்பதை குறித்த பதிவுதான் இது.

செடிகள் பூ வைக்கவும் பூக்கள் காயாகவும் நாம் பயன்படுத்தும் உரம் தான் இந்த தேமோர் கரைச்சல். இதைஆர்கானிக் முறையில் செய் வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருமே பயன்படுத்திய முறை தான் இது. இந்த உரம் தயாரிப்பதிற்கு நமக்கு தேவையானது இரண்டே பொருள் தான். அதுவும் நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய், மோர் இரண்டும் தான் இது இரண்டும் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் இருக்கும் செடிகள் அனைத்திலும் கொத்து கொத்தாக காய்கள் வைத்த இதை விட ஒரு சிறந்த உரம் இருக்க வாய்ப்பில்லை அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செடிகள் பூக்க காய்க்க வேண்டும் என்றால் அதற்கு அதிகம் உரம் தேவை படுகிறது. நாம் கொடுக்கும் உரங்கள் அனைத்தும் செடி வேர்களுக்கு சென்று செடியின் கிளைகள் இலைகளுக்கு வருவதற்குள் சத்துக்குள் குறைந்து விடுகிறது இந்த தேமோர் கோர்சல் உரத்தை நாம் நேரடியாக சேடியின் இலை கிளைகளுக்கு தரும் பொது செடியில் பூக்கள் விரைவாக போக்கவும் காய் வைக்கவும் இந்த முறை நல்ல பலனை கொடுக்கிறது.

இந்த உரம் தயாரிக்க அரை மூடி தேங்காய் எடுத்து நன்றாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவு தேங்காய் பால் எடுக்கிறோமோ அதே அளவிற்கு நன்றாக புளித்த மோர் தண்ணீராக கரைத்து தேங்காய் பால் மோர் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு வாரம் வரை மூடி போட்டு அப்படியே வைத்து விட வேண்டும்.

- Advertisement -

ஒரு வாரம் கழித்து நீங்கள் கொடுக்கும் தேமோர் கரைச்சலுக்கு ஐந்து பங்கு அளவிற்கு தண்ணீர் ஊற்றி செடிகளுக்கு தெளிக்கும் போது செடிகள் நன்றாக பூ வைக்கும் பூ வைத்த செடிகள் நன்றாக காய்க்கவும் செய்யும்.

இதையும் படிக்கலாமே: உங்க பூச்செடி எல்லாம் பூச்சி வச்சி வாடிருச்சா? கவலையை விடுங்க, பைசா செலவில்லமா ஒரே ஸ்பிரேவில் அத சரி பண்ணி பூக்க வச்சிடலாம்.

இது பூச்செடிகளுக்கு, காய வைக்கும் செடி கொடிகளுக்கு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த உரத்தை செடியின் வேர் பகுதியில் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை .

- Advertisement -