நீங்கள் வளர்க்கும் எந்த செடியாக இருந்தாலும், அதற்கு இந்த ஒரு இலையை அரைத்து ஒரு முறை உரமாக கொடுத்து விடுங்கள். செடி கொடிகள் எல்லாம் காடு போல வளர்ந்து நிற்கும்.

- Advertisement -

நம் வீட்டில் பத்து செடிகள் வைத்தால் அதில் பத்தும் வளர்வதில்லை, அதில் ஒன்று இரண்டு வளராமல் அப்படியே பாதியில் நின்று விடும். சில செடிகள் ஓரளவிற்கு நன்றாக வளர்ந்து கொண்டே இருக்கும், திடீரென அதன் வளர்ச்சியும் அப்படியே நின்று விடும். இப்படி செடியின் வளர்ச்சி பாதித்து பாதியிலே நின்று விடும். அப்படியான செடிகளுக்கு இந்த ஒரு உரத்தை கொடுத்தால் செடிகள் நன்றாக வளர ஆரம்பிக்கும். அது என்ன உரம் என்று இப்போது வீட்டு தோட்டம் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் நாம் வீட்டில் வளர்க்கும் எந்த செடியுமே அதன் தன்மைக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும். சில செடிகள் வெயில் நன்றாக பட்டால் தான் வளரும். சில செடிகள் வெயில் பட்டால் வளராது. இப்படி தண்ணீரிலிருந்து உரம் வரை ஒவ்வொரு செடியின் தன்மையும் மாறும். இதை தெரிந்து அதற்கு ஏற்றவாறு பராமரித்தால் கண்டிப்பாக செடிகள் வீணாகாமல் அனைத்தும் முளைத்து நன்றாக வளரும்.

- Advertisement -

இப்போது இந்த செடிகளுக்கு கொடுக்கும் அந்த இலை உரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது வளராத செடிகளுக்கு மட்டுமல்ல சில செடிகளில் இலைகள் எல்லாம் பழுத்து உதிர்ந்து விடும். அது மட்டுமின்றி வைரஸ் பூச்சி போன்றவை எல்லாம் செடிகளை தாக்கும் இது போன்ற பிரச்சனைகளை கூட இந்த இலை உரம் சரி செய்து கொடுக்கும்.

செடிகளின் வளர்ச்சியை காக்கக்கூடிய அந்த இலை முருங்கை இலை தான். இதன் சாறை தான் செடிகளுக்கு கொடுக்க வேண்டும் அது எப்படி என்று பார்க்கலாம். இந்த முருங்கை இலையில் செடியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளது. பொட்டாசியம், நைட்ரஜன் கால்சியம், சிங் என ஒரு செடி நல்ல முறையில் செலுத்து வளர என்னென்ன சத்துக்கள் தேவையோ அனைத்துமே இதில் உண்டு.

- Advertisement -

இந்த உரம் தயாரிக்க முருங்கை இலையை கொஞ்சமாக எடுத்து அரைத்து அந்த விழுதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இந்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் அளவு தண்ணீர் கலந்து உங்கள் செடிகளில் வேர் பகுதியில் வேரின் படாமல் சுற்றி ஊற்றி விடுங்கள். இதை வாரம் ஒரு முறை இப்படி ஊற்றி வந்தால் செடிகள் வேர்களுக்கு இந்த சத்துக்கள் சென்று செடிகள் நன்றாக வளரும். இலைகள்,பூக்கள், காய் எல்லாமே பெரிதாக முளைத்து வரும் செடியும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த முருங்கை இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் முருங்கை இலை பொடி கிடைக்கும் அதை வாங்கியும் தண்ணீரில் கலந்து இதே போல் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தி வரலாம்.

இதையும் படிக்கலாமே: தக்காளி செடிக்கு இப்படி உரத்தை கொடுத்து பாருங்க, ஒரு செடியிலேயே கொத்து கொத்தா தக்காளியை காய்க்க வைக்கலாம். வாங்க அது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.

இந்த உரத்தை செடிகள் வைத்து துளிர்க்க ஆரம்பித்த உடனே கொடுத்து விட வேண்டும். அப்போது தான் அனைத்து சக்திகளும் ஆரம்பம் முதல் ஊறி செடி வாடாமல் பூச்சி வைக்காமல் நன்றாக செழித்து வளரும்.

- Advertisement -