நீங்க விதைக்கும் ஒவ்வொரு விதையும் முளைத்து வர ஒரு அருமையான ட்ரிக்ஸ் இருக்கு தெரியுமா?. இந்த ட்ரிக்ஸ் மட்டும் நீங்க தெரிஞ்சிக்கிட்டா தோட்டம் வைக்கிறதுல நீங்க தான் கில்லாடி.

- Advertisement -

வீட்டில் செடி வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டாலே அதற்காக அதிகம் மெனக்கிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடும். இதனாலையே அநேகம் பேர் அந்த ஆசையை அப்படியே நிறுத்தி விடுகின்றனர். ஆனால் இந்த சின்ன சின்ன விஷயங்களை நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். தோட்டத்தை அதிக சிரமம் இல்லாமல் வளர்த்து விடலாம். இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் அது போன்று ஒரு பயனுள்ள தகவலை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செடிகளை பொறுத்த வரையில் நாம் நர்சரியிலோ அல்லது தெரிந்தவர்களிடமோ வாங்கி வந்து வளர்த்து விடலாம். அதற்கான வழிமுறைகள் பலவும் உள்ளது. ஆனால் ஒரு சில செடிகள் விதைத்து தான் முளைக்க வைக்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் விதைக்கும் அனைத்து விதைகளும் முளைத்து விடுவதில்லை. விதைப்பதில் பாதி அளவு வீணாகி தான் போகிறது. அதை எப்படி வீணாகாமல் வளர்ப்பது என்பதை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

விதைகளை நடவு செய்வதற்கு முன்பாக அதைத் தேர்வு செய்வதிலிருந்து கவனமாக செய்ய வேண்டும். அதாவது நடவு செய்ய அதிக பழைய விதைகளை வாங்கக் கூடாது. புதிய விதைகளாக பார்த்து தான் வாங்க வேண்டும்.

அடுத்ததாக விதைகளை நடவு செய்வதற்கு முன்பாக விதை நேர்த்தி செய்ய வேண்டும் அதற்கு நாம் வீட்டில் தயாரிக்கும் ஏதேனும் ஒரு இயற்கை உரத்தில் ஒரு மணி நேரம் விதைகளை ஊற வைத்த பின் நடவு செய்யலாம். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் தண்ணீரில் கூட ஊற வைத்தும் நடவு செய்யலாம். இதன் மூலம் விதைகளில் இருந்து நாற்று விரைவில் வெளி வரும்.

- Advertisement -

இப்போது இந்த விதைகளை நடவு செய்யும் அந்த ட்ரிக்ஸ் தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு விதையிலுமே வெள்ளை நிறத்தில் ஒரு பகுதி இருக்கும். அந்த இடத்தில் இருந்து தான் நாற்று முளைத்து வரும். விதைகளை நடவு செய்யும் பொழுது முளைத்து வரக் கூடிய அந்த வெண்மையான பகுதியை நேரடியாக மண்ணுக்குள் மூழ்குமாறு நடவு செய்ய வேண்டும். விதையின் அளவை விட  இரண்டு மடங்கு ஆழத்தில் இதை விதைத்து விட்டால் போதும். வேர் மண்ணில் சுலபமாக பரவ இது உதவி செய்யும். அதே நேரத்தில் செடிகளும் விரைவில் முளைத்து வரும்.

இத்துடன் முளைத்த செடிகள் தழைத்து வளர ஒரு சின்ன உர கரைச்சலையும் நாம் வீட்டிலே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு பெரிய கற்றாழை மடலை எடுத்து அதன் மேற்புறம் இரண்டையும் நறுக்கி எடுத்து விடுங்கள். இந்த கற்றாழை மடலை சின்ன சின்னதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஐந்து நாள் வெயில் படாத ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். இதை மூடி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இதையும் படிக்கலாமே: தோட்டம் வைத்திருப்பவர்கள் இந்த இயற்கை உரத்தை அதிக செலவில்லாமல் தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். நீங்கள் வளர்க்கும் ஒரு செடி கூட இனி வாடி வதாங்காது.

ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து தண்ணீரின் அளவிற்கு அதே அளவு சாதாரண தண்ணீரையும் கலந்து நாம் நட்டு வைத்திருக்கும் விதைகளின் மீது லேசாக தெளித்து வர செடிகள் சீக்கிரம் வேர்பிடித்து தழைத்து வளரும். இனி நீங்கள் விதைகளை நடவு செய்யும் போது இந்த ட்ரிக்ஸை தெரிந்து கொண்டு நடவு செய்து பாருங்கள். விதைக்கும் விதைகள் வீணாகாமல் அனைத்தும் நல்ல முறையில் முளைத்து தழைத்து வளரும்.

- Advertisement -