பூச்செடிகள் அதிக மொட்டு வைத்து பெரிய பெரிய பூக்களாக பூத்து, உங்கள் வீட்டை அழகாக்க வேண்டுமா? இதோ நீங்கள்சமையலுக்கு பயன்படுத்தும் இந்த காய் போதும். இத்தனை நாள் இது தெரியம்மா போச்சே.

- Advertisement -

செடிகளுக்கு உரமாக நாம் சமையலறையில் தேவையில்லை என்று வீணாக்கும் பொருட்களை பலவற்றை வைத்து உரங்களாக கொடுத்து விடலாம். அது மட்டும் இன்றி இன்னும் சில பொருட்களையும் இதனுடன் சேர்த்துக் கொடுக்கும் போது செடிகளுக்கு பூச்சி தொல்லையிலிருந்து விடுபடுவதோடு, செடி நன்றாக மொட்டு வைத்து வேர் அழுகல் நோய் வராமல் இருக்க, இப்படி பல வகைச் செடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலே உள்ளது. அந்த வகையில் அப்படி ஒரு பயனுள்ள குறிப்பை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போவது கேரட் பற்றி தான். சமையலறை கழிவுகள் எனும் போது கேரட் தோலை நாம் எப்போதுமே கீழே போடாமல் அதை கம்போஸ்ட் உரமாக மாற்றி செடிகளுக்கு கொடுப்பது என்று அனைவருக்கும் தெரிந்தது தான். அந்த வகையில் கேரட் செடிகளுக்கு உரம் தான். ஆனால் வெறும் கேரட் மட்டுமே செடிகளுக்கு நல்ல உரமா என்பது பலருக்கு தெரியாது அதை எப்படி கொடுக்கலாம் என்பதை பற்றி தான் இந்த குறிப்பு.

- Advertisement -

கேரட் பிரஷ்ஷாக இருக்கும் போது சமையலுக்கு பயன்படுத்தினால் தான் அது நல்ல ருசியாக இருக்கும் சத்தும் கூட, வாங்கி வைத்து நாட்கள் ஆகிவிட்டால் அது வதங்கி போய் விடும். சமையலுக்கும் நன்றாக இருக்காது. அதை தூக்கி தூர தான் போட வேண்டும். இனி அப்படி செய்யாமல், வதங்கிய கேரட் களை சின்னச் சின்னதாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து தண்ணீரில் கலந்து கரைத்து வைத்து விடுங்கள். இது மூன்று நாட்கள் அப்படியே வைத்து விட்டால் அந்த கேரட் தண்ணி நன்றாக புளித்து விடும்.

ஒரு கப் கேரட் தண்ணீருக்கு ஐந்து கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த கரைசலை நன்றாக வடிக்கட்டி பூச்செடிகளுக்கு உரமாக கொடுத்தால், செடிகளில் புதிய கிளைகள் வைத்து அதிகமாக மொட்டுக்கள் வைப்பதுடன், பூக்கள் நல்ல பெரிதாகவும் பூக்கும்.

- Advertisement -

இது மிகவும் ஒரு எளிமையான முறை தான், பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் கேரட் இருக்க தான் செய்யும். எப்படியும் ஒன்று இரண்டு கேரட்டை வீணாக தூக்கி போடத்தான் செய்வார்கள். அப்படி தூக்கிப் போடாமல் அந்த கேரட்டை இப்படி செடிகளுக்கு உரமாக மாற்றி பயன் அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் ஆசையை வளர்க்கும் செடிகளை எல்லாம் இந்த பூச்சிகள் பாழாக்கி விடுகிறதா? அதை சரி செய்ய உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்த பொருள்கள் போதும்.

இந்த பதிவில் உள்ள குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வீட்டு செடிகளுக்கு நீங்களும் இந்த கேரட் உரத்தை கொடுத்து நல்ல அதிகமான பெரிய பெரிய பூக்களை உங்கள் வீட்டு தோட்டத்திலும் பார்க்கலாம்.

- Advertisement -