- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த மசாலாவை அரைத்துப் போட்டு சேனைக்கிழங்கு வறுவலை மட்டும், ஒரு வாட்டி இப்படி செய்து பாருங்க....

இந்த மசாலாவை அரைத்துப் போட்டு சேனைக்கிழங்கு வறுவலை மட்டும், ஒரு வாட்டி இப்படி செய்து பாருங்க. வேற லெவல் டெஸ்ட். செய்யும்போதே நாக்கில் எச்சி ஊறும்.

- Advertisement -

சேனைக்கிழங்கை வைத்து நம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி வறுவல் செய்வோம். ஆனால் ஸ்பெஷலாக இந்த மசாலா பொடியை அரைத்துப் போட்டு இப்படி சேனைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்கள். இந்த ருசிக்கு சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. இந்த ரெசிபியை உங்க வீட்ல ட்ரை பண்ணி நீங்க டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொன்னா தான் உங்களுக்கு புரியும். சரி நேரத்தைக் கடத்தாமல் சூப்பரான சேனைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது தெரிந்துகொள்வோமா.

chenai

முதலில் அரை கிலோ அளவு சேனைக்கிழங்கை எடுத்து தோல் சீவி கொஞ்சம் தடிமனாக வெட்டி தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதி விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். சேனைக்கிழங்கு ரொம்பவும் கொழகொழவென தண்ணீரில் வேக விட்டுவிடக் கூடாது. முக்கால் பாகம் சேனைக்கிழங்கு தண்ணீரில் கொதித்து வெந்தால் போதும். இந்த சேனைக் கிழங்குகளை தண்ணீரை வடித்து விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி விட்டு, அதில் சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், சிறிய துண்டு பட்டை – 1, கிராம்பு – 2, மிளகு – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 3, இந்த பொருட்களை சேர்த்து பொன்னிறமாக கருகாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நம்முடைய சேனைக்கிழங்கு வறுவல் ஸ்பெஷல் மசாலா அரவை. தண்ணீர் ஊற்றாமல் இதை கொரகொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

seenai1

இப்போது சேனைக்கிழங்கு வறுவல் செய்யப்போகின்றோம். அடுப்பில் ஒரு கனமான அகலமான கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, இடித்த பூண்டு பல் – 2, கறிவேப்பிலை – 2 கொத்து, சேர்த்து இந்த பொருட்களை எல்லாம் நன்றாக வதக்கி விடுங்கள். இந்த பொருட்கள் சிவந்து வரட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக வேக வைத்திருக்கும் சேனைக்கிழங்கை கடாயில் போட்டு எண்ணெயில் இரண்டு நிமிடம் போல ஃபிரை செய்து விடவேண்டும். அடுத்து மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை கிழங்கின் மேல் தூவி, பிறகு தேவையான அளவு உப்பு தூவி, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, இந்த வறுவலை அப்படியே சிவக்கவைத்து மசாலாவின் பச்சை வாடை போகும் வரை, மசாலாக்கள் நன்றாக கிழங்கில் ஒட்டி பிடிக்கும் வரை, ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வறுத்து எடுத்தால் சூப்பரான சுடச்சுட சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

seenai2

இந்த ரெசிபியின் வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும். ட்ரை பண்ணி பாருங்க. சாம்பார் சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் எதிர்க்கு வேண்டும் என்றாலும் இதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.

சற்று முன்