கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்க ஜானகிதேவி காயத்ரி மந்திரம்

God

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியையே நித்தமும் நினைத்துக்கொண்டிருந்தவள் சீதா தேவி. அதே போல சீதையை தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவர் ராம பிரான். அன்னை சீதை எவ்வளவு பரிசுத்தமானவள் என்பது இந்த உலகறிந்த விடயம். அவளுக்குரிய மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக கணவனின் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை விலகி ஒற்றுமை ஓங்கும். இதோ சீதைக்கான காயத்ரி மந்திரம்.

Seetha

ஜானகிதேவி காயத்ரி மந்திரம் / சீதா காயத்ரி மந்திரம் :
ஓம் ஜனகனாயை வித்மஹே
ராமபிரியாய தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

பொது பொருள்:
ஜனக மகாராஜாவின் மகளாக பிறந்து ஸ்ரீ ராமரின் மனதில் என்றும் நிலைத்த அன்னை சீதா தேவியே உங்களை பணிகிறேன்.

இதையும் படிக்கலாமே:
கிரக தோஷங்களை நீங்கி முகத்தில் தேஜஸ் ஒளிர உதவும் மந்திரம்

மேலே உள்ள மந்திரத்தை தினமும் ஜெபிப்பதன் பயனாக சீதையின் அருளை பெறலாம். அதன் பயனாக கணவன் மனைவிக்கு இடையே எப்பேர்ப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அது சூரியனை கண்ட பனி போல விலகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்கும், பாசம் அதிகரிக்கும்.