என்னை பொறுத்தவரை சஹால், குலதீப் ஆகிய இருவரில் ஒருவருக்கு பதில் மீண்டும் இவர் இந்திய ஒருநாள் அணியில் ஆடவேண்டும் – சேவாக்

sehwaq

ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் என இரு தொடர்களையும் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. தற்போது அந்த அணியே நியூசிலாந்தில் நடைபெறும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி (1-0) என்கின்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

kuldeep

தற்போது உள்ள அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என இரு தரப்பும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் கூட சுழற்பந்து வீச்சாளரான குலதீப் யாதவ் நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும், சாஹல் 2 விக்கெட்டுகளை சாய்த்து நியூசிலாந்து அணிக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் சுழற்பந்துவீச்சாளர்கள் பற்றிய தன் கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போதைய இந்திய அணியின் இரு சுழற்பந்து வீச்சாளர்களும் மிகச்சிறப்பாகவே பந்து வீசுகின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இவர்கள் இருவரும் ஐ.சி.சி நடத்திய தொடர்களில் அதிகம் விளையாடியது கிடையாது.

ashwin

எனவே, இவர்களில் ஒருவர் உலகக்கோப்பையில் ஆடட்டும். மற்றொருவருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த இந்திய சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் விளையாடவேண்டும். ஏனெனில், அவர் 2011 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி என பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். எனவே, அவரது அனுபவம் மற்றொரு சுழற்பந்து வீச்சாளருக்கு வழிகாட்டும். ஆகையால் அவரை உலகக்கோப்பை தொடரில் ஆட வைக்கவேண்டும் என்பது என்னுடைய தனி கருத்து என்று தெரிவித்தார்.

- Advertisement -

தமிழக வீரரான அஸ்வின் பற்றிய தங்களுடைய கருத்தினை கமெண்ட் பகுதில் தெரிவிக்கலாம் நண்பர்களே.

இதையும் படிக்கலாமே :

2019ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் தோனியுடன் இவர் ஆடினால் தான் பினிஷிங் ஜோடி சிறப்பாக அமையும் – கம்பீர் கருத்து

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்