செல்வம் குவிய ஐப்பசி மாத வழிபாடு

murugan mahalakshmi
- Advertisement -

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கென தனி சிறப்பு உண்டு. ஆடி மாதம் என்றால் அது அம்மனுக்கு உகந்த மாதம். அந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு சிறப்பு. அதே போல் புரட்டாசி மாதம் எனில் சனிக்கிழமை மிகவும் விசேஷம். இந்த நாளில் பெருமாளை வணங்கி அவரின் அருளாசியை பெறலாம். அதே போல தை மாதம் வெள்ளிக்கிழமை விசேஷம்.

அந்த வகையில் இந்த ஐப்பசி மாதமானது வெள்ளி, செவ்வாய் இரண்டு நாட்கள் விசேஷமானதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அந்த இரண்டு நாட்கள் விசேஷம்? அந்த நாட்களில் நாம் எப்படி வழிபாடு செய்ய வேண்டும். யாரை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் செல்வம் பெருக வழிபாடு

ஐப்பசி மாதம் என்றாலே அது சுக்கிரனுக்கு உரிய மாதம் என்று சொல்லப்படுகிறது. சுக்கிரனுக்குரிய நாளெனில் அது வெள்ளிக்கிழமை. அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமை அன்று நாம் மகாலட்சுமி தாயாரை வணங்கும் போது நம்முடைய வீட்டில் சகல செல்வங்களையும் பெறலாம். இதே நாளில் அம்பாளை வழிபடுவது சுக்கிரனை வழிபட்டதற்கு சமமாக சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை காலையில் பிரம்ம முகூர்த்த வேளை அல்லது சுக்கிர ஹோரையில் செய்வது மிகவும் சிறந்தது. இந்த நேரத்தில் பூஜையறையில் முதலில் தீபம் ஏற்றி நாம் வெள்ளிக்கிழமை பூஜைகளை முறையாக செய்து முடித்து விட வேண்டும். அதன் பிறகு ஒரு பெரிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் முன்பு மகாலட்சுமி தாயாரின் படத்தை வைத்து சில்லறை நாணயங்களை குவியலாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த சில்லரை நாணயத்திற்கு மேல் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து விட்டு அதன் முன்பு ஒரே ஒரு வெற்றிலையை வைத்து அதன் மீதும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். இப்பொழுது நல்ல தரமான குங்குமத்தினை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அந்த வெற்றிலையில் போட்டு மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை சொல்ல வேண்டும்.

இது தெரியாது அல்லது படிக்க முடியாது என்பவர்கள் ஓம் மகாலட்சுமியே நமஹ என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்துக் கொண்டு குங்குமத்தால் வெற்றிலையில் அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் இதே சில்லரை நாணயத்தை வைத்து வழிபடலாம்.

- Advertisement -

ஐப்பசி மாதத்தின் இறுதியில் வரும் வெள்ளிக்கிழமை அன்று பூஜை முடிந்த பிறகு இந்த சில்லறை காசுகளை ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஏதேனும் கோவிலுக்கு செல்லும் போது அங்கு இந்த பணத்தை இறை பணிக்காக செலவு செய்யுங்கள். இந்த குங்குமத்தை நெற்றியில் திலகமாக இட்டு கொள்ளுங்கள்.

ஏனெனில் ஐப்பசி மாதத்தில் அடுத்த விசேஷமான நாள் எனில் அது செவ்வாய்க்கிழமை. அதுமட்டுமின்றி முருகருக்கு விசேஷமான நாள் எனில் செவ்வாய்க்கிழமை. இந்த ஐப்பசி மாதத்தில் சஷ்டி விரதம் இருப்பார்கள். ஆகையால் இந்த ஐப்பசியில் வரும் செவ்வாய்க்கிழமையும் விசேஷமாக கருதப்படுகிறது. செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்குவது மிகவும் நல்ல பலனை தரும்.

அத்துடன் ஐப்பசியில் வரும் கிருத்திகை அன்று விரதம் இருப்பது மிகவும் விசேஷம். செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து விட்டு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை படிக்கலாம். வேல் வழிபாடு செய்வது மேலும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே: சாப விமோசனம் பெற உதவும் தீபம்.

ஐப்பசியில் மாதத்தில் இந்த இரண்டு நாட்களையும் தவற விடாமல் வழிபட்டு வரும் போது நம்முடைய வாழ்க்கையில் சகல சம்பத்துகளையும் பெற்று நல்லதொரு வளமான வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழிப்பாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் செய்து பலன் அடையலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -