சாப விமோசனம் பெற உதவும் தீபம்.

sabam
- Advertisement -

ஒரு குடும்பத்தில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருந்தாலும் முன்னேற்றம் என்பதே இல்லாமல் இருந்தாலும் அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது தான் சாபங்கள். யாராவது ஒருவர் மனவேதனைப்பட்டு சொல்லக்கூடிய வார்த்தைகள் தான் சாபமாக உருவாகிறது. இந்த சாபத்தை பல வகைகளில் நாம் பிரிக்கலாம். எப்பேர்பட்ட சாபமாக இருந்தாலும் அந்த சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாப விமோசனம் பெறுவதற்கு எந்த தீபத்தை ஏற்றி எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சாபம் என்பது முனிவர்கள் காலத்தில் நடந்திருப்பதாக நாம் அனைவரும் கதைகளில் படித்திருக்கிறோம். சாபம் என்று ஒன்று ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கு சாப விமோசனம் அல்லது பரிகாரம் என்று பல முறைகள் இருக்கின்றன. அவற்றை செய்யும் பொழுது சாப நிவர்த்தி ஆகி சாபம் பெற்ற நபர்கள் அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி நிம்மதியாக வாழ்வார்கள். அந்த வகையில் எப்பேர்ப்பட்ட சாபமாக இருந்தாலும் அந்த சாபத்தை தீர்ப்பதற்கு நமக்கு ஒரு தீபம் உதவி புரியும்.

- Advertisement -

இந்த தீபத்தை மாதத்தில் ஒரு நாள் மட்டும் ஏற்றினால் போதும். அமாவாசை நாளன்று அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது புதிதாக ஒரு அகல் விளக்கையும் பச்சரிசி மாவையும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அகல் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதை சுவாமிக்கு முன்பாக வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி அந்த அகல் விளக்கை சுற்றி நான்கு இதழ் கொண்ட பூக்கள் இருப்பது போல் கோலம் போட வேண்டும். எவ்வளவு பெரிய கோலம் வேண்டுமானாலும் போடலாம் அல்லது சிறிதாக போடுவதாக இருந்தாலும் போடலாம்.

ஆனால் கண்டிப்பான முறையில் நான்கு இதழ்கள் இருப்பது போல் போட வேண்டும். அதாவது நாளா பக்கமும் வரக்கூடிய சாபங்கள் நிவர்த்தியாக வேண்டும் என்பதற்காக தான் இந்த நான்கு இதழ்கள் கொண்ட பூக்களை அந்த விளக்கை சுற்றி நாம் போடுகிறோம். விளக்கு நடுவில் இருக்க வேண்டும். விளக்கை சுற்றி கோலம் போட வேண்டும். கோலம் போட்ட பிறகு விளக்கை நடுவில் வைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கோலம் போட்ட பிறகு நாம் அணிந்திருக்கும் துணியில் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வேஷ்டி அணிந்திருந்தால் வேஷ்டியின் ஒரு நுனியை கிழிக்க வேண்டும்.

- Advertisement -

பெண்களாக இருந்தால் முந்தானி அல்லது ஷாலிலிருந்து ஒரு முனையை பிடித்து அதை திரியாக திரித்து அந்த விளக்கில் போட்டு இறைவனை மனதார வழிபட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் உடுத்திய துணியை கிழித்து திரியை போட்டு தீபம் ஏற்றும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய சாபங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. சாபத்தை நீக்குவதால் இந்த தீபத்தை கண்டிப்பான முறையில் சிவாலயங்களில் மட்டுமே தான் போட வேண்டுமே தவிர வேறு எங்கும் போடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஏகாதசி வழிபாட்டு பலன்கள்.

மிகவும் எளிமையான இந்த தீபத்தை நம் ஏற்றி வழிபட்டு நம்மிடம் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கி வளமான வாழ்க்கையை வாழ்வோம்.

- Advertisement -