வீடு செல்வ செழிப்புடன் இருக்க இன்று இரவுக்குள் நிலை வாசலில் இதை வைத்தால் போதும்.

duragai nilai vasal
- Advertisement -

இன்று நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி தினம். இன்றைய நாளில் முப்பெரும் தேவியரான துர்கா, சரஸ்வதி, மாகலட்சுமி இவர்களை வணங்கி போற்றுதல் மிகவும் சிறப்பு. அதுமட்டுமின்றி இன்றைய நாளில் நாம் தொடங்கும் எந்த செயலும் வெற்றியில் தான் முடியும் என்பதும் ஐதீகம். ஆகையால் தான் இன்றைய நாளில் குழந்தைகளின் கல்வியை தொடங்கினால் அது வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தினத்தில் நம் குடும்பம் செல்வ செழிப்புடன் லட்சுமி கடாட்சம் பெற்று தீயவைகள் நீங்கி நன்மைகள் பெற நிலை வாசலில் செய்ய வேண்டிய ஒரு முறையைப் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஆலயம் முதல் வீடு வரை நுழைவாசல் என்பது மிகவும் பிரதானமானதாக கருதப்படுகிறது. ஆகையால் தான் நிலை வாசலையை எப்பொழுதுமே நாம் சிரத்தையுடன் வணங்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

- Advertisement -

அந்த வகையில் விஜயதசமி நாளான இன்று நாம் நிலை வாசலில் வைத்து வணங்கக் கூடிய ஒரு பொருளால் நம் வீட்டில் என்றென்றைக்கும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். அத்துடன் தரித்திரம் நீங்கி தீயவை எதுவும் நம் இல்லத்தை நெருங்காமல் நம்மை காக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பொருள் வேறொன்றுமில்லை அட்சதை தான்.

மங்கள காரியங்கள் முதல் அனைத்திலும் இந்த அட்சதை இடம் பெறுகிறது. எந்த ஒரு விஷயத்திற்கும், எந்த ஒரு நல்ல காரியத்திற்கும், பிறரை வாழ்த்தவும், பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்ற வார்த்தை கூட சொல்லும் போது அட்சதையை தான் முதலில் பயன்படுத்துவோம். அப்படியான அட்சதையை இன்று காலை முதல் இரவுக்குள் நம் வீட்டின் நிலை வாசலில் வைப்பதனால் நம் செல்வ கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதற்கு முதலில் இரண்டு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பச்சரிசியை சேர்த்து கொஞ்சமாக நெய் மஞ்சள் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது இந்த அரிசி மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதன் மேல் கொஞ்சமாக பூக்களையும் தூவி நிலை வாசலில் இரண்டு புறமும் வைத்து வணங்கி கொள்ளுங்கள்.

இந்த அட்சதையானது உங்கள் வாசலில் இருக்கும் பொழுது தீயவை ஏதும் உங்கள் வீட்டிற்குள் வராமல் தடுக்கும். அது போல தரித்திரம் நீங்கி விடும். அது மட்டும் இன்றி அட்சதையானது மங்களப் பொருள் மட்டும் இன்றி மகாலட்சுமி தாயாருக்கு கூறியதாகவும் பார்க்கப்படுகிறது அப்படியான பொருள் நிலை வாசலில் இருக்கும் பொழுது நம் வீட்டிற்கு சுபிட்சத்தை தரும். அதையும் இந்த நாளில் வைப்பது இன்னும் பல நல்ல பலன்களை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க இன்றைய விசயதசமி நாளில் வித்தியாரம்பம் வீட்டிலே இப்படி செய்யுங்கள்.

இந்த அட்சதையை எப்போது வைத்தாலும் இன்று அப்படியே வைத்து விட்டு நாளை இதை எடுத்து கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த நல்ல நாளில் இப்படி ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நம் குடும்பம் செல்வ கடாசத்துடன் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்பிக்கை இருப்பவர்கள் இந்த முறையை இன்று செய்து வழிபடலாம்.

- Advertisement -