குழந்தைகள் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க இன்றைய விசயதசமி நாளில் வித்தியாரம்பம் வீட்டிலே இப்படி செய்யுங்கள்.

saraswathi children write
- Advertisement -

நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் சரஸ்வதி தேவிக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் நம் வீட்டில் படிக்கும் குழந்தைகள் முதல் புதிதாக பள்ளியில் சேர்க்க துவங்கும் குழந்தைகள் வரை அனைவரையும் வைத்து சரஸ்வதி தாயாரை வணங்குவது அவர்களின் கல்வியறிவை மேலும் மேலும் வளர செய்யும்.

அந்த வகையில் புதிதாக பள்ளியில் சேர்க்கக் கூடிய குழந்தைகளை சேர்ப்பதற்கு முன்பாக அவர்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைக்கும் முறை நம்முடைய வழக்கத்தில் உள்ளது. இந்த முறையை ஆலயம் அல்லது பள்ளிகளில் செய்வார்கள். அதே முறையை நம் வீட்டிலும் கூட எளிமையாக நம் குழந்தைகளுக்கு நாமே செய்து வைக்கலாம். அது எப்படி என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வித்யாரம்பம் செய்யும் முறை
ஒவ்வொரு பெற்றோரின் கனவுவே தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும். அதற்கான முதல் படியை எடுத்து வைக்கும் நாளாக தான் இன்றைய விஜயதசமி நாளை கொண்டாடுகிறோம். அப்படியான இந்த நாளில் நம் குழந்தைகளின் படிப்பை துவங்கி வைக்கும் முறை தான் இந்த வித்தியாரம்பம் என்னும் வழக்கம். அதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கல்வி அறிவு தருபவர் சரஸ்வதி தாயாராக இருப்பினும் புத்தியை புத்தியை தெளிவாக்கித் தருபவர்
புதபகவான் தான். ஆகையால் சரஸ்வதி தாயாருக்கான இன்றைய தினத்தில் புதன் ஹேரையில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் சிறந்தது. இந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள்ளாகவும் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்வதற்கு எப்போதும் போல பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் எல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் சுவாமி படங்களை துடைத்து மஞ்சள், குங்குமம் ,பொட்டு வைத்து மலர் அலங்காரங்களை செய்து பூஜை அறையில் தீபம் ஏற்றி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நெய்வேத்தியமாக ஏதேனும் ஒரு இனிப்பு வகையை கட்டாயமாக செய்து வைத்து விடுங்கள். ஏனெனில் இன்றைய தினம் குழந்தைகளின் கல்வியை துவங்கி வைக்கப் போகும் இனிமையான நாள். அந்த நாளை இனிமையாக துவங்கவே இந்த இனிப்பு நெய்வேத்தியம். அடுத்து ஒரு பெரிய தாம்பாள தட்டை எடுத்து அதில் நெல்மணிகளை பரப்பி விடுங்கள். நெல்மணிகள் இல்லாத பட்சத்தில் பச்சரிசியை பரப்பி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் செய்த பிறகு பூஜை அறையில் நீங்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மடியில் குழந்தையை அமர வைத்துக் கொள்ளுங்கள். அந்த நெல்மணியில் முதலில் பிள்ளையார் சுழியை குழந்தையின் விரலை பிடித்து போடுங்கள். சிலருக்கு தங்க ஊசி பயன்படுத்தி எழுதும் வழக்கம் உண்டு. இயலாதவர்கள் தங்க மோதிரம் போட்டிருந்தால் அதை வைத்தும் போடலாம். எதுவும் இல்லை எனில் வெறும் விரலாலும் எழுதலாம் தவறில்லை.

இந்த பிள்ளையார் சுழியை போட்ட பிறகு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுத வேண்டும். அதன் பிறகு உங்கள் குலதெய்வத்தின் பெயரை எழுத வேண்டும். குலதெய்வத்தின் பெயர் பெரிதாக இருந்தால் ஒவ்வொரு வார்த்தைக்கு மேலாக வார்த்தையை எழுதுங்கள். இதையெல்லாம் எழுதிய பிறகு அ என்ற வார்த்தையை எழுதி பழக்குங்கள்.

இப்படி செய்யும் போது குழந்தை அதற்கு அடுத்து எழுத போகும் நோட்டு பென்சில் ஸ்லேட் போன்றவற்றை அருகில் வைத்து கொள்ளுங்கள். நெல்மணியில் எழுதிய பிறகு அதிலும் முதல் எழுத்தை எழுதி இன்றைய நாளில் குழந்தைகளின் படிப்பை தொடங்கி வைத்து விடுங்கள். விஜயதசமி நாளில் இதை செய்யும் பொழுது குழந்தைகளுக்கு கல்வி ஞானத்தில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு இலை இருந்தால் வராத பணமும் வந்து சேரும்.

இதை வீட்டில் படித்த சான்றோர்கள் வயதில் மூத்தோர்கள் இருந்தால் அவர்களிடத்தில் உங்கள் பிள்ளையை அமர வைத்து இப்படி எழுத பழக்குங்கள். யாரும் இல்லாத பட்சத்தில் தாய் தந்தையரே தங்கள் மடியில் அமர வைத்து இப்படி வித்தியாரம்பம் செய்து வைக்கலாம். இன்றைய நாளில் இப்படி எளிமையாக குழந்தைகளுக்கு இந்த முறையில் கல்வி அறிவை துவக்கி வைத்து அவர்களின் வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றிக் கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -