கடன் பிரச்சினை தீர எளிய பரிகாரங்கள்

kadan pariharam
- Advertisement -

கடனால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம் என்பது நம்மில் பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மையே. இக்கட்டான சூழ்நிலையில் வாங்கிய கடனை திரும்ப அடைப்பதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கடன் வாங்க கூடிய சூழ்நிலை ஏற்படும் பொழுது வாங்கிய கடனை திரும்ப அடிப்பதற்குரிய சூழ்நிலையும் ஏற்படத்தான் செய்யும். அந்த சூழ்நிலையை சரியான முறையில் பயன்படுத்தினால் தான் அந்த கடன் சுமையிலிருந்து நம்மால் வெளியில் வர முடியும். அவ்வாறு பயன்படுத்தாவிட்டால் நம்மால் அந்த கடனிலிருந்து மீளவே முடியாமல் போய்விடும்.

- Advertisement -

கடன் சுமை அதிகம் இருப்பவர்கள் வளர்பிறையில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாள் அன்று அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவ சமாதிக்கு செல்ல வேண்டும். அதாவது சித்தர்கள் ஜீவசமாதி என்று இருக்கும். அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சென்று தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒரு பொருளை அன்னதானமாக அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன் சுமை குறையும்.

வியாழக்கிழமை அன்று குங்குமத்தை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட வேண்டும். பிறகு வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு அந்த குங்குமத்தை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு இருக்கக் கூடிய அம்மனுக்கோ அல்லது தாயாருக்கோ இந்த குங்குமத்தை தானமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய கடன் பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். வேலை நிமித்தமாக வாங்கிய கடனாக இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் குங்குமத்தை வாங்கி வைத்து எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வர கடன் சுமை குறைந்து விடும்.

வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை பூ மாலை வாங்கி கொடுத்து வழிபட்டு வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் செய்து வருவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கடன் சுமையும் மறையும்.

- Advertisement -

யார் ஒருவருக்கு கடன் சுமை அதிகமாக இருக்கிறதோ அவர்கள் தங்கள் கைகளாலேயே வெள்ளத்தால் செய்யப்பட்ட பாயாசத்தை அருகில் இருக்கும் பசுமாட்டிற்கு தானமாக வழங்க வேண்டும். இந்த தானத்தை தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்து வர கடன் பிரச்சினைகள் தீர ஆரம்பிக்கும்.

முழு கோதுமையை கடையிலிருந்து வாங்கி வந்து அதை சுத்தம் செய்து நன்றாக காய வைத்து கோதுமை மாவாக அரைக்க எடுத்துச் செல்லும் பொழுது அதில் ஏழு துளசி இலைகளையும் சிறிது குங்கும பூவையும் கலந்து அரைக்க வேண்டும். அரைத்த இந்த மாவு வீட்டில் இருக்கும் பொழுது அந்த வீட்டில் பணப் பிரச்சனை என்பதே இருக்காது. பணப்புழக்கம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: சோமவாரத்தில் செய்ய வேண்டிய வழிபாடு.

மிகவும் எளிமையாக அனைவராலும் செய்யக்கூடிய இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் செய்து வந்து அதே சமயம் கடன் பிரச்சினை தீர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டால் விரைவிலேயே கடன் சுமை குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -