இவர்களைப் போல நீங்களும் செல்வந்தராக இந்த 5 விஷயங்களை கடைபிடித்து பார்க்கலாமே! நம் முன்னோர்கள் கூறியதை தான் இவர்களும் பின்பற்றுகிறார்கள் தெரியுமா?

gold-sani
- Advertisement -

பெரும்பாலும் வட இந்திய மாநில மக்களில் குறிப்பிட்ட சிலர் மிகவும் செல்வந்தராக வளம் வருவதைப் பார்க்க முடிகிறது. நம் முன்னோர்கள் நமக்கு கூறிச் சென்ற சில விஷயங்களை இவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். முன்னோர்கள் சொல்லிய வழியில் சென்றால் முன்னேற்றம் நிச்சயம் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் இன்று நாம் இவற்றையெல்லாம் சரியாக கடைபிடிப்பது கிடையாது. இதனால் நம்மிடம் இருக்கும் செல்வமும் நம்மைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அகன்று போய்க் கொண்டிருக்கிறது. அப்படியான விஷயங்கள் என்ன? நாம் எதை செய்ய தவறுகிறோம்? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

settu-gold

பெரிய பெரிய வணிக வியாபாரம் முதல் நகைக்கடை, ஜவுளிக்கடை, ஹார்டுவேர்ஸ் என்று அனைத்து துறைகளிலும் புகழ் பெற்று வரும் இவர்கள் தங்களுடைய பாரம்பரிய செயல்முறைகளையும், வழிமுறைகளையும் மாற்றிக் கொள்வது இல்லை. மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதிலும், இன்முகத்துடன் பேசுவதிலும் இவர்கள் கை தேர்ந்தவர்கள். வியாபார நுணுக்கமும், மற்றவர்களை எளிதில் கவரும் விதமாக பேசுவதில் சாமர்த்தியமும் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

- Advertisement -

மார்வாடிகள் என்று கூறப்படும் சேட்டுகள் ஆகிய இவர்கள் இந்த ஐந்து விஷயங்களை தொடர்ந்து தங்களுடைய வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றனர், அதனால் அவர்களுடைய வாழ்வும் வளமாகவும், செம்மையாகவும் இருக்கிறது. இதே போல இவர்கள் கடைப்பிடிக்கும் சில விஷயங்கள் நமக்கும் நம் முன்னோர்கள் கற்பித்த சில விஷயங்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலாவதாக குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஒன்று சேர்ந்து எல்லாவற்றையும் செய்வது இவர்களுடைய பலமாகும். ஒற்றுமை முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது நம் முன்னோர்கள் நமக்கு கூறிச் சென்ற ஒன்று தான். ஆனால் இப்போது எல்லோரும் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று தான் விரும்புகிறோம். பெற்ற தாய், தந்தையரை பாதுகாக்க கூட யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

blessings

அவர்கள் எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் பெரியவர்களுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் இன்று நல்ல நாள், விசேஷத்தில் கூட யாரும் பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வது இல்லை. பெரியவர்களுடைய ஆசிர்வாதம் இருந்தாலே இயல்பாகவே நாம் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும் என்பது சூட்சமமான உண்மை. வயதில் மூத்தவர்கள், அனுபவசாலிகள், நம் முன்னோர்கள் ஆகியோரை காணும் பொழுது அவர்களுடைய காலில் விழுந்து அவர்கள் நம்மை வாழ்த்துமாறு ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

எப்பொழுதும் அவர்களுடைய வீடுகளில் இனிப்புக்கு குறைவிருக்காது. விசேஷ காலங்களில் மட்டும் அல்லாமல் அன்றாடமும் வீட்டில் இனிப்பு பண்டங்கள் இல்லாமல் கட்டாயம் இருப்பது இல்லை. யார் வீட்டிற்கு வந்தாலும் முதலில் இனிப்பு பண்டங்களை கொடுத்து இன்முகத்துடன் வரவேற்பார்கள். இது விருந்தோம்பல் என்கிற முறையில் நம்மவர்களும் கடைபிடிப்பது உண்டு. ஆனால் அதனை மறந்து வருவது தான் நம்முடைய குற்றம். வீட்டில் எப்பொழுதும் இனிப்பு பண்டங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும் அல்லது வாங்கியாவது வைக்க வேண்டும். மேலும் பக்தியிலும் அவர்கள் குறைந்து போனதில்லை.

pooja-room

விநாயகர் மற்றும் மஹாலக்ஷ்மியை பெரிதும் வழிபடுவது சிறப்பு. எப்பொழுதும் பூஜையறையை நறுமணத்துடனும், விளக்கு ஏற்றி ஒளிமயமுடனும் வைத்திருப்பார்கள். தினமும் விளக்கு ஏற்றும் வீடுகளில் நிச்சயம் செல்வம் பெருகும் அதில் மாற்று கருத்து இல்லை என்பதை இவர்கள் மூலம் நாம் உணர முடியும். பணத்தை இவர்கள் பட்டுக் கருநீல துணியில் தான் வைப்பார்கள். கருநீலம் என்பது சனிபகவானுக்கு உகந்த நிறமாக இருக்கின்றது. எல்லா வகையிலும் சனி பகவானுடைய அருள் நமக்கு கிடைக்க நாம் சம்பாதிக்கும் பணத்தை கருநீல பட்டு துணியில் வைத்து முடிந்து பணப்பெட்டியில் அல்லது பீரோவில் வைத்து கொள்ளலாம். இதெல்லாம் ஒரு சூட்சம ரகசிய குறிப்புகள் தான், இவற்றை பின்பற்றி பாருங்கள் நன்மைகள் பெருகும்.

- Advertisement -