வெறும் ஐந்து ரூபாய் செலவில் செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சிகள் அனைத்தையும் காணாமல் செய்து விடலாம். அப்புறம் என்ன கலர் கலரா செம்பருத்தி பூ செடி வாங்கி வளர்க்க வேண்டியது தானே.

- Advertisement -

இந்த செம்பருத்தி செடியானது தோட்டம் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல, சாதாரணமாகவே எல்லோர் வீட்டிலும் வைத்திருக்கக் கூடியது தான். செம்பருத்தி செடிக்கு பராமரிப்பு என்று நாம் பெரிதாக எதையும் செய்ய வேண்டியது இல்லை. சாதாரணமாக தண்ணீர் விட்டாலே போதும் செடியானது நன்றாகவே வரும். ஆனால் இந்த செம்பருத்தி செடியில் மொட்டுக்கள் வைத்து பூக்கும் நேரத்தில் அதில் மாவு பூச்சிகள் வந்து மொட்டுக்களின் சத்துக்களை உறிஞ்சி விடும் இதனால் மொட்டுக்கள் கருகி விடும். அதற்கான பூச்சி விரட்டியை விரட்டியை எப்படி தயார் செய்வது, செடிகளுக்கு எப்படி கொடுப்பது என்பதையெல்லாம் இந்த வீட்டுத் தோட்டம் பதிவில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

செம்பருத்தி செடியை பொறுத்த வரையில் நல்ல வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டும். இதற்கு பராமரிப்பு என்று எதையும் செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் மற்ற செடிகளுக்கு கொடுக்கும் எந்த உரங்களை வேண்டுமானாலும் கொடுத்து வரலாம். உரமே இல்லை என்றாலும், அரிசி கழுவிய தண்ணீர், கிச்சன் கழிவுகள் போன்றவைகளை போட்டால் கூட போதும். இந்த செம்பருத்தி செடியானது நன்றாக செழித்து வளரும்.

- Advertisement -

செம்பருத்தி செடியில் மொட்டுக்கள் வைத்தவுடன் அதில் மாவு பூச்சி, அஸ்வினி பூச்சி போன்றவைகள் வந்து விடும். இதனால் மொட்டுக்கள் அனைத்தும் பூக்காமல் கருகி உதிர்ந்து விடும். இந்த பிரச்சனையை சரி செய்ய நாம் எந்தவித செலவும் செய்யாமல் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தினால் போதும். பூச்சிகள் அனைத்தும் காணாமல் போய் விடும். அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.

இதற்கு நாம் பயன்படுத்த போகும் அந்த பொருள் இஞ்சி. ஒரு ஐந்து ரூபாய் அளவிற்கு இஞ்சி இருந்தால் கூட போது.ம் அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி இடி உரலில் போட்டு பஞ்சு போல நசுக்கி அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்த உடன் அடுப்பை அணைத்து விட்டு இதை இரண்டு மணி நேரம் அப்படியே ஆறட்டும். அதன் பிறகு அந்த நீரை வடிகட்டி அத்துடன் கொஞ்சம் கோமியம் (நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்) கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பூச்சி விரட்டியை தெளிக்கும் முன்பு நீங்கள் ஒரு முறை செடிகளின் மீது தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடியுங்கள். இதன் மூலம் செடிகளில் இருக்கும் பூச்சிகள் பாதிக்கு மேல் உதிர்ந்து விடும். அதன் பிறகு இந்த பூச்சி விரட்டியை ஸ்ப்ரே செய்து விட்டால் ஒன்று இரண்டு நாட்களிலே செடிகளில் இருக்கும் பூச்சிகள் அனைத்தும் காணாமல் போய் விடும்.

இதை அடித்த அடுத்த நாளில் எல்லாம் பூச்சிகள் பெருமளவு இருக்காது. ஒரு வேலை ஒன்று இரண்டு இருந்தால் இன்னும் ஒரு முறை மட்டும் இதை கொடுங்கள் போதும். அது மட்டும் இன்றி இந்த செம்பருத்தி செடியில் எப்பொழுதுமே இது போல பூச்சிகள் வராமல் இருக்க மாதத்திற்கு ஒரு முறையாவது வேப்ணெண்ணை கரைச்சலை கொடுத்தால் போதும் இந்த பூச்சி தொல்லை இருக்காது.

இதையும் படிக்கலாமே: இது வரை பூக்காத பூச்செடிகளை கூட பூக்க வைக்க நீங்கள் பயன்படுத்தி தூக்கி எறியும் இந்த பொருட்கள் போதும். ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் பூக்க வைத்து விடலாம்.

இந்த எளிமையான பூச்சி விரட்டியை செலவில்லாமல் நாமே வீட்டில் தயாரித்து செம்பருத்தி செடிக்கு கொடுத்து அழகான பூக்களை பெறலாம்.

- Advertisement -