- Advertisement -
Homeவீட்டு தோட்டம்செம்பருத்தி செடி வளர்ப்பு முறை

செம்பருத்தி செடி வளர்ப்பு முறை

- Advertisement -

செம்பருத்தி செடி ஏராளமான பலன்களை கொடுக்கக்கூடிய அற்புதமான ஒரு செடி வகையாகும். செம்பருத்தி பூ முதல் இலை வரை அனைத்துமே பயன் தரக்கூடியது. செம்பருத்தி செடியின் பூவை பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுத்துவார்கள். தலைமுடி கருமையாக நீண்டு வளர்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த செம்பருத்தி செடியை சுலபமாக ஒரு சின்ன குச்சி இருந்தால் போதும், செழிப்பாக வளர செய்யலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? செம்பருத்தி செடி வளர்ப்பதில் இருக்கக்கூடிய சிக்கல்கள், அதை தீர்க்கும் முறைகள் பற்றிய தோட்டக்குறிப்பு தகவல்களை தான் தொடர்ந்து காண போகிறோம்.

செம்பருத்தி செடியை கடையில் காசு கொடுத்து வாங்கி வைத்து வளர்த்தாலும், அது சரியாக வளரவில்லை என்று புலம்புபவர்கள் 10 பைசா செலவில்லாமல் பக்கத்து வீட்டிலும், தெரிந்தவர்கள் வீட்டிலும் இருந்தால் இப்படி செய்து பாருங்கள் நன்கு வளரும். தோட்டக்கலையில் சிறந்த பூஞ்சை கொல்லி மருந்தாக இருக்கக்கூடியது சாஃப் (saaf fungicide) இதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எல்லா வகையான பூச்செடிகளுக்கும், காய், கனி செடிகளுக்கும் இது பூஞ்சை கொல்லி மருந்தாக பயன்படும்.

- Advertisement -

உங்களுக்கு தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தினர், சொந்தக்காரர்கள் என்று யாருடைய வீட்டில் நன்கு செழிப்பாக செம்பருத்தி செடி இருக்கிறதோ, அதிலிருந்து ஒரு உள்ளங்கையளவுக்கு சிறியதாக குச்சியை மட்டும் உடைத்து கேட்டு வாங்கி வாருங்கள். அதில் இருக்கும் இலைகளை எல்லாம் கத்தரித்து விடுங்கள். குச்சியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். குச்சியின் ஒரு முனையில் பென்சில் சீவுவது போல சாய்வாக ஒரு சீவு சீவிக் கொள்ளுங்கள்.

மறுமுனையிலும் அதே போல சீவி கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் தோட்ட மண் நிரப்பியுள்ள தொட்டியில் அல்லது ஏதாவது ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் மண்ணை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். சீவி வைத்துள்ள ஒரு முனை பகுதியை நீங்கள் வாங்கி வைத்துள்ள சாஃப் பவுடரில் தண்டு பகுதியில் படுமாறு தொட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பகுதியை மண்ணிற்குள் புதைத்து வையுங்கள்.

- Advertisement -

இறுக்கமாக மண்ணை மூடிய பின்பு மறுமுனைப் பகுதியை பாலித்தீன் பை கொண்டு மூடி வைக்க வேண்டும். ஒரு வெள்ளை மெல்லிய பாலிதீன் பையைக் கொண்டு தொட்டியை மூடி வையுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் தொட்டியை திறந்து தண்ணீரை ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். அதிகம் தண்ணீரை ஊற்றக்கூடாது. மண்ணும், தண்டு பகுதியும் ஈரமானதும் விட்டு விடுங்கள். இது போல இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து கொண்டே வாருங்கள், 25 லிருந்து 30 நாட்களுக்குள் வேர்பிடித்து, தளிர் விட்டு புதிய இலைகள் முளைக்க ஆரம்பித்து விடும்.

இதையும் படிக்கலாமே:
சென்னையில் இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு

அதன் பின்பு நீங்கள் விரும்பிய தொட்டியில் அதை மாற்றி வையுங்கள். இந்த முறையில் கட்டிங் பிளான்டிங் பண்ணும் பொழுது வேர் பிடிக்கும் பொழுது வேர் அழுகாமல், பூஞ்சை தொற்று ஏற்படாமல் 99 சதவீதம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். ஒரு சிறு குச்சியிலேயே பூத்துக் குலுங்க கூடிய செழிப்பான செம்பருத்தி செடியை எளிதாக வளர்த்து விடலாம். நீங்களும் இதே முறையில் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

சற்று முன்