வெறும் கையால தேய்ச்சு செம்புப் பாத்திரங்களை தங்கம் போல ஜொலிக்க வைக்க முடியும் தெரியும்மா? இத தெரிஞ்சிச்சுகிட்டா உங்க வீட்டில் இருக்க பழைய செம்பு பாத்திரங்களையெல்லாம் இனி தங்கம் போல ஜொலிக்கும்.

- Advertisement -

முன் காலத்தில் எல்லாம் மண் பண்டங்கள் தான் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது. அதற்கு அடுத்த படியாக இந்த செம்புப் பாத்திரம் தான் பயன்படுத்தி வந்தர்கள். செம்புப் பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிக்கும் போதும் அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் போதும் அதில் இருக்கும் தாது பொருட்கள் நம் உடலுக்கு சென்று அது நன்மை தரக் கூடிய சத்தாக மாறுகிறது. அதே போல் பூஜைக்கும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்தும் போது அது இறை சக்தியை அதிகமாக ஈர்த்து நமக்கு தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பதிவில் இந்த செம்பு பாத்திரத்தை எப்படி பயன்படுத்துவது அதை எப்படி சுத்தப்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செம்பு பாத்திரங்களை பொருத்த வரையில் தண்ணீரை முதல் நாளே ஊற்றி வைத்து அடுத்த நாள் பருகுவது தான் சிறந்தது. இந்த தண்ணீரில் அதில் இருக்கும் காப்பர், தண்ணீரில் கலந்து நம் உடலுக்குள் சென்று ரத்த சுத்திகரிப்புக்கு பெரிதும் உதவி செய்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் செம்புப் பார்த்திரங்களில் தான் தண்ணீர் வைத்து பருகி வந்தார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் கெடாமல் நீண்ட நாட்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள்.

- Advertisement -

செம்புப் பாத்திரம் துலுக்கி அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்று’ என்ற பழமொழி கூட உண்டு செம்புப் பாத்திரத்தை அலசி ஊற்றும் அந்த தண்ணீரில் இருக்கும் தாதுவை ஊறிஞ்சும் செடிகள் அதன் மூலம் தரும் காய்களை நாம் உண்ணும் போது, நம் உடலுக்கு அத்தனை பலன்களை தரும் என்பதை தான் நம் முன்னோர்கள் பழமொழி வாயிலாகவே அன்று சொல்லி வைத்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பருகி நம் உடல் ஆரோக்கியத்தை காத்தல் நல்லது. இனியும் நாம் முடிந்த வரையில் இந்த செம்பு பாத்திரங்களை பயன்படுத்துவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.

செம்புப் பாத்திரங்கள் பயன்பாடு குறைந்ததற்கு காரணம் ஒன்று இந்தப் பொருட்களில் விலை, மற்றொன்று இதை சுத்தப்படுத்துவது. இந்த பாத்திரத்தை பொருத்த வரையில் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அப்போது தான் பாத்திரம் பார்க்க நன்றாக இருக்கும். நமக்கு அதன் சத்தும் முழுமையாக கிடைக்கும். இத்தகைய காரணத்தினாலே இன்றைக்கு இருக்கும் சூழலில் இதையெல்லாம் சரியாக செய்ய முடியாமல், இந்த செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறார்கள். இனி அப்படி அல்லாமல் இந்த செம்பு பாத்திரத்தை சுத்தப்படுத்துவதை கூட சுலபமாகவே செய்து விடலாம். அதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த செம்பு பாத்திரத்தை சுத்தப்படுத்த இரண்டு ஸ்பூன் கோலமாவு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் உப்பு, இவற்றுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு மூன்றையும் ஒன்றாக கலக்கும் போது நுரைத்து புளித்த மாவு போல பொங்கி வரும். இந்த கலவையை நீங்கள் பயன்படுத்தும் செம்பு பாத்திரங்களின் மீது தேய்த்து விடுங்கள். இரண்டு நிமிடம் அப்படியே இருந்தால் கூட போதும். இதன் பிறகு நீங்கள் வெறும் கையாலே லேசாக தேய்த்தாலே போதும் பாத்திரங்கள் பளப்பளப்பாக மாறி விடும்.

செம்புப் பாத்திரங்களை சுத்தப்படுத்த எப்போதும் சோப்பு போன்றவைகளை பயன்படுத்தக் கூடாது. இது போல நாம் வீட்டிலே தயார் செய்து கொண்டு தேய்க்கலாம். அல்லது வெறும் புளியை வைத்து தேய்த்தால் கூட செம்புப் பாத்திரங்கள் வெண்மையாக மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: இனி தேங்காய் எண்ணெய் காய்ச்சும் போது இந்த ட்ரிக்ஸ் பாலோ பண்ணுங்க, பத்தே நிமிஷத்துல எப்போதையும் விட அதிகமாவே எண்ணெய் காய்ச்சலாம். இந்த ட்ரிக்ஸ் சூப்பரா ஒர்கவுட் ஆகும்

இந்த பதிவில் செம்பு பாத்திரம் பயன்படுத்துவதின் அவசியத்தையும், சுத்தப்படுத்துவதையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் வீட்டில் செம்பு பாத்திரங்களை வாங்கி பயன்படுத்தாமல் இருந்தால் அதை எடுத்து இந்த முறையில் சுத்தப்படுத்தி பயன்படுத்த தொடங்குங்கள்.

- Advertisement -