குப்பையில் தூக்கி போடும் இந்த 2 பொருட்களை வைத்து செம்பு பாத்திரங்களை கைவலிக்க தேய்க்காமல் 5 நிமிடத்தில் பளிச் பளிச் என மாற்றி விடலாம்.

copper
- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் வீடுகளில் செம்பு, பித்தளை போன்ற பொருட்கள் தான் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது. தண்ணீர் குடிக்க, சாதம் சமைக்க என எல்லாவற்றிற்கும் செம்பையும், பித்தளையும், தான் அதிக அளவு பயன்படுத்தி வந்தார்கள். இதற்கு என்ன காரணம். அது எந்த வகையிலும் நம் உடம்பிற்கு தீங்கை ஏற்படுத்தாது. இதில் சமைப்பதால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும், என்றும் நீண்ட காலம் உடல் இளமையுடன் இருக்குவும் தொப்பை வராமல் இருக்கவும் தான், இப்படிப்பட்ட பாத்திரங்களை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள்

இது போன்று பல விஷயங்களை இன்று ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள. ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால் நாம் பித்தளையோ செம்புக்களையும் அதிக அளவில் பயன்படுத்துவதில்லை. காரணம் அதை பராமரிப்பது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு.

- Advertisement -

நம் வீட்டில் தூக்கி எறியும் இந்த இரண்டு பொருள்கள் மட்டும் இருந்தாலே போதும். செம்பு பாத்திரங்கள் புதிதாக வாங்கியது போல் எப்பொழுதும் பளபளவென இருக்கும். அதுவும் நீங்கள் அழுத்திகூட தேய்க்க வேண்டாம். ஸ்கப்பர், நார் ஏதும் உபயோகப்படுத்த வேண்டாம் என்றெல்லாம் சொன்னால் எத்தனை ஆச்சரியமாக இருக்கிறது. சரி, அந்த குறிப்பை இப்போது நாமும் தெரிந்து கொள்வோமா.

இதற்கு தேவையான முக்கியமான பொருள் உங்கள் வீட்டில் மீந்து கடைசியில் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும் புளித்த மாவு தான். நம் எல்லோரும் வீட்டில் மாவு அரைத்து பயன்படுத்திய பிறகு அதில் ஒட்டி இருக்கும் அடி மாவை வீணாக கரைத்து சிங்கில் தான் ஊற்றி விடுவோம். அதே போல் நம் எல்லோர் வீட்டு பிரிட்ஜிலும் நிச்சயம் ஒரு காய்ந்த எலுமிச்சை பழம் இருக்கும். அதையும் தூக்கி நாம் வெளியில் தான் வீசுவோம். இனி அதையும் தூக்கி போட வேண்டாம்.

- Advertisement -

புளித்த மாவில் இந்த எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து விட்டு ஒரு ஐந்து நிமிடம் விடுங்கள். அது நன்றாக நுரைத்திருக்கும் அதன் பிறகு எவ்வளவு கருப்படைந்த செம்பு பாத்திரம் ஆக இருந்தாலும் சரி அதன் மேல், இந்த மாவு எலுமிச்சை சாறு கலந்த கலவையை தேய்த்து ஒரு 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அவ்வளவுதான் மீதி இருக்கும் அந்த எலுமிச்சை தோலை கொண்டு லேசாக மேலே தேய்த்தாலே போதும், செம்பு பாத்திரம் கருப்பு நிறம் மாறி புதிதாக வாங்கியது போல் ஜொலிக்க ஆரம்பித்து விடும். பிறகு நீங்கள் கவலையே பட தேவை இல்லை. தாராளமாக செம்பு பாத்திரங்கள் வாங்கி பயன்படுத்துங்கள்.

பித்தளை பாத்திரங்களை தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு புளியும் தேங்காய் நாரும் இருந்தாலே போதும். பித்தளை பாத்திரங்களை சுலபமாக தேய்த்து சுத்தம் செய்து விட முடியும். இதே முறையில் உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை கூட தேய்த்து பாருங்கள். இந்த பாத்திரங்களை இவ்வளவு ஈஸியா சுத்தம் செய்ய முடியுமா என்று நீங்களே ஆச்சர்யபடுவீர்கள்.

- Advertisement -