சேமியா இந்த பெயரை கேட்டாலே தலை தெறிக்க ஒடுபடுவர்களை, சுண்டி இழுத்து சாப்பிட வைக்க இப்படி ஒரு முறை செய்து குடுங்க. சமைச்ச உங்களுக்கே கொஞ்சம் கூட மிச்சம் இருக்காதுன்னா பாருங்களேன்.

Semiya Egg Briyani
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டிபன் செய்வது என்றாலேயே தோசை, இட்லி, உப்புமா என்று தான் செய்வார்கள். பல பேரின் வீட்டில் உப்புமா என்பது பிடிக்காத உணவாக இருந்து வருகிறது. இன்று நாம் சேமியாவை வைத்து புதுவிதமான முறையில் ஒரு டிபனை தயார் செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கப் போகிறோம்.

சேமியா முட்டை பிரியாணி செய்ய முறை விளக்கம்:
முதலில் 1 பக்கெட் சேமியாவை சிறிது நெய் ஊற்றி வறுத்துக் தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். வறுத்த சேமியாவாக இருந்தாலும் அதை மறுபடியும் வறுக்கும் பொழுது அது உதிரியாக இருக்கும். அடுத்து நாம் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 3 முட்டை வீதம் உடைத்து ஊற்ற வேண்டும். அதில் 2 சிட்டிகை மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். முட்டை மிகவும் பொடியாக உதிரி உதிரியாக இருப்பது போல் நன்றாக கிளற வேண்டும். இப்பொழுது இந்த முட்டையை வேறொரு பவுலில் மாற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரியாணி இலை – 1, கிராம்பு – 1, சிறிதளவு பட்டை, 1/4 டீஸ்பூன் – சோம்பு சேர்க்க வேண்டும். சோம்பு சிவந்த பிறகு அதில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். அத்துடன் இரண்டு பச்சை மிளகாய், சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயத்தின் நிறம் சிறிது மாறியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1/2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும்.

இவை நன்றாக வதங்கிய பிறகு, அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதக்கிய பிறகு கேரட், பீன்ஸ், பட்டாணி இவற்றில் ஏதாவது ஒற்றை நம் வசதிக்கேற்ப சேர்க்கலாம். காய்கறி இல்லாத பட்சத்தில் எதுவும் சேர்க்காமல் இருக்கலாம். ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 250 மில்லி லிட்டர் என்ற வீதத்தில் தண்ணீரை சேர்க்க வேண்டும். பிறகு அதில் 1/4 டீஸ்பூன் உப்பை சேர்த்து ஒரு தட்டை வைத்து மூடிவிட வேண்டும்.

- Advertisement -

இப்போது தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து நன்றாக கிளறிய பிறகு மறுபடியும் தட்டை வைத்து மூடி விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து நன்றாக கிளற வேண்டும். தண்ணீர் சுத்தமாக வற்றிய பிறகு நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் முட்டையை அதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் மீந்த சாதம் இருந்தா அதை வெச்சி ரொம்ப டேஸ்ட்டான இந்த ஸ்நாக்ஸ் செஞ்சி பாருங்க. அப்புறம் உங்க வீட்ல இனி ஸ்நாக்ஸ்க்காக கடைக்கு போகவே மாட்டாங்க.

மிகவும் சுவையான அருமையான முட்டை சேமியா பிரியாணி தயாராகி விட்டது. கடைசியாக இதில் கொத்தமல்லி தழையை தூவி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிமாறலாம். சேமியா பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட ஒரு கட்டு கட்டுவார்கள்.

- Advertisement -