எப்பவும் நம்ம வீட்ல செய்யற தேங்காய் சாதத்தில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா? இப்படி ஒரு ரெசிபியை யாரும் யோசித்து கூட இருக்க மாட்டீங்க. நாளைக்கு லஞ்ச் பாக்ஸுக்கு உங்க வீட்ல கட்டாயம் இது தான் இருக்கும்.

thengai-sadam
- Advertisement -

எப்பவும் நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய தேங்காய் சாதம் தான். ஆனால், அதை இன்னும் கொஞ்சம் கூடுதல் ருசியோடு, கூடுதல் சத்தோடு செய்யப் போகின்றோம். அது எப்படி தெரியுமா. ரெசிபியை படித்துப் பார்ப்போமா. காலையில் எழுந்து குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டுவோம் அல்லவா. அப்போது பரபரப்பாக வேலை இருக்கும். அதை சுலபமாக்க இதுவும் ஒரு வழி. வாங்க நேரத்தை கடத்தாமல் சூப்பரான இந்த தேங்காய் சாதம் ரெசிபியை தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் 1 கப் அளவு அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அது பாஸ்மதி அரிசியாக இருக்கலாம். அல்லது சாப்பாட்டு அரிசியாக இருக்கலாம். அல்லது சீரக சம்பா அரிசி அது உங்களுடைய விருப்பம்தான். இந்த அரிசியை நன்றாக கழுவி வைத்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த அரிசியை அதில் போட்டு 1 டம்ளர் அரிசிக்கு, 2 டம்ளர் அளவு தேங்காய் பாலை ஊற்றவும். 1/2 மூடி தேங்காய் துருவி வழக்கம் போல மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு முறை தேங்காய் பால் எடுக்கலாம் தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

இப்போது குக்கரில் அரிசியும் தேங்காய் பாலும் இருக்கிறது. இந்த சாதத்திற்கு தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு மூடி மூன்று விசில் விட்டு பக்குவமாக வேக வைத்துக் கொள்ளவும். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அதே சமயம் சாஃப்ட் ஆகவும் வெந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வேக வைத்த அந்த சாதத்தை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் நெய் விட்டு, அது காய்ந்ததும் கடுகு 1 ஸ்பூன், உளுந்து 1 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், முந்திரி பருப்பு 10, பச்சை மிளகாய் 2, வரமிளகாய் கிள்ளியது 3, போட்டு தாளிக்கவும். இந்த பொருட்கள் எல்லாம் சிவந்து வந்தவுடன் இஞ்சி துருவல் 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, பெருங்காயம் 1/4 ஸ்பூன், போட்டு தேங்காய் துருவல் துருவியது 1 கப், சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்றாக பிரட்டி விட்டு, வடித்து வைத்திருக்கும் சாதத்தை இதில் போட்டு கிளறினால் சூப்பரான தேங்காய் சாதம் தயார். இதன் மேலே இறுதியாக கொத்தமல்லி தலையை தூவி லஞ்ச் பாக்ஸில் கட்டி கொடுங்கள்.

- Advertisement -

நாம் வழக்கமாக செய்யும் தேங்காய் சாதத்தை விட, இப்படி தேங்காய் பாலில் சாதத்தை வேக வைத்து எடுத்து செய்யும் போது இதனுடைய ருசி ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு மசாலா வறுவல், அல்லது வாழைக்காய் காரக் கறி, கருணைக்கிழங்கு வருவல், இப்படி ஏதாவது சைடிஷ் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டில் அடிக்கடி பால் திரிந்து போகிறதா பலன் என்ன? பால் பொங்கி வழிந்தாலும், திரிந்து போனாலும் நடக்கக்கூடிய விபரீதங்கள் என்னென்ன?

அப்படி இல்லை என்றால் குழந்தைகளுக்கு இதனுடன் காலிஃப்ளவர் சில்லி, மஸ்ரூம் சில்லியை கூட வைத்து கொடுத்தால் போதும். அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். முட்டை தொக்கு கூட சுலபமாக செய்து சைடிஷ் ஆக வைக்கலாம். அது நம்முடைய விருப்பம் தான். அருமையான இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -