இட்லி நல்லா புசுபுசுன்னு மல்லிப்பூ மாதிரி வர இதை சேர்த்து தான் அரைக்கணும். அட இத கூடவா இட்லி மாவில் சேர்ப்பாங்க அப்படின்னு யோசிக்கிற மாதிரி ஒரு சூப்பர் சீக்ரெட் டிப்ஸ் இருக்கு.

- Advertisement -

நம்முடைய உணவுப் பழக்கங்களில் டிபன் என்றாலே இட்லி தோசை தான். இந்த இட்லி தோசைக்கு மாவு அரைப்பது என்றாலே அதற்கான அளவுகளில் சரியாக அரைத்தால் தான் தோசை, இட்லி இரண்டுமே நன்றாக வரும். இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நல்ல மல்லி பூ மாதிரி புசுபுசுன்னு இட்லி வர மாவு எப்படிஅரைக்க வேண்டும் என்பதையும் அதில் சேர்க்க வேண்டிய ஒரு சீக்ரெட் இன்கிரிடியன்ஸ் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மல்லிகை பூ போன்ற சாஃப்ட் இட்லி செய்ய மாவு அரைக்கும் முறை: 
முதலில் இட்லி நாலு டம்ளர் அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். எந்த டம்ளரில் அரிசி அளக்கிறீர்களோ அதே டம்ளரில் ஒரு டம்ளர் அளவு உளுந்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் தனி தனியாக சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள். இப்போது ஊற வைத்திருக்கும் உளுந்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இது பெரும்பாலும் அனைவரும் சேர்க்கக் கூடிய ஒரு பொருள் தான். அதே போல் அரிசியில் இரண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பொட்டுக்கடலை தான் மாவு அரைக்க நாம் பயன்படுத்தி இருக்கும் சீக்ரெட் பொருள். இதை சேர்த்து அரைக்கும் போது இட்லி ரொம்பவே சாப்ட்டா கிடைக்கும்.

- Advertisement -

அரிசி உளுந்து இரண்டும் நான்கு மணி நேரம் ஊ ற வேண்டும். முதலில் கிரைண்டரில் உளுந்தை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு உளுந்து ஊற வைத்த தண்ணீரை சேர்க்க வேண்டாம். இந்த தண்ணீரை அப்படியே எடுத்து வைத்து விடுங்கள். ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் வாட்டர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உளுந்து நன்றாக பொங்கி வரும் அளவுக்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். உளுந்தை கையில் எடுத்து தண்ணீரில் போட்டால் பந்து போல உருண்டு வர வேண்டும். அந்த அளவிற்கு அரைப்பட வேண்டும் இது தான் சரியான பக்குவம்.

அடுத்ததாக கிரைண்டரில் அரிசியை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மாவை எடுத்த பிறகு கிரைண்டரை சுத்தம் செய்ய நாம் ஏற்கனவே உளுந்து ஊற வைத்த தண்ணீரை எடுத்து வைத்திருந்தோம் அல்லவா அதை ஊற்றி கிரைண்டரை சுத்தம் செய்து அந்தத் தண்ணீரை ஊற்றி மாவு கரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு தனியாக வேறு தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

- Advertisement -

இப்போது உளுந்து அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைத்து விடுங்கள். எட்டு மணி நேரம் வரை இந்த மாவு அப்படியே பு ளிக்க விடுங்கள், எட்டு மணி நேரம் கழித்து இட்லி ஊற்ற தேவையான அளவு மாவை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி மாவை மூடி அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பத்து பேர் துணியைக் கூட பத்தே நிமிஷத்துல சுலபமா துவைக்க ஒரு சூப்பர் ஐடியா. இதுக்கு வாஷிங் மெஷின் தான் இருக்கணும்னு அவசியம் கூட இல்ல. வாங்க அந்த ட்ரிக்ஸ் என்னவென்று பார்ப்போம்.

கரைத்து வைத்த மாவை இனி நீங்கள் இட்லி பாத்திரத்தை வைத்து எப்போதும் போல இட்லி ஊற்றி கொள்ளலாம். இந்த முறையில் மாவு அரைத்து இட்லி ஊற்றினால், இட்லி மல்லிப்பூ போல அவ்வளவு மெருது வாக புசுபுசுவென்று சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த முறையில் மாவரைத்து இட்லி ஊற்றி பாருங்கள் அட்டகாசமாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -