நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம், உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க, நிலை வாசல் படியில் இந்த 1 பொருள் இருந்தாலே போதும்.

door-vasal-lakshmi
- Advertisement -

பணத்தை சம்பாதிப்பதில் இருக்கும் கஷ்டத்தை விட, சம்பாதித்த பணத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்பதில் தான் சூட்சுமமே அடங்கியுள்ளது. பணத்தை யார் வேண்டுமென்றாலும் எப்படியாவது ஒரு வழியில் சம்பாதித்து விடலாம். சம்பாதித்த பணம் நம் கையில் தங்குகின்றதா. வீண் விரயம் ஆகாமல் இருக்கின்றதா. சுபகாரிய செலவுக்காக பயன்படுத்தப்படுகின்றதா. சேமிப்பில் இருக்கின்றதா? என்பது தான் கேள்வி. பணத்தை தக்கவைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அதில் ஒரு சுலபமான வழியை பற்றித்தான் இன்று, இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

nayuruvi

மிக மிக சுலபமான வழி. அதே சமயம் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பரிகாரம் என்று கூட சொல்லலாம். மகாலட்சுமிக்கு சொந்தமான, மிகவும் பிடித்தமான பல பொருட்கள் உள்ளது. அந்த வரிசையில் நாயுருவி வேர், செந்நாயுருவி வேர், என்ற இந்த இரண்டு வேரும் அடங்கும். செந்நாயுருவி வேர் கிடைக்காத பட்சத்தில் நாயுருவி வேரை இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது செந்நாயுருவி வேருக்குத் தான். உங்களுடைய வீட்டின் அருகில் இந்த செடியின் வேர் கிடைத்தால் நீங்களே அந்த செடியில் இருந்து வேரை, உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வரலாம். வியாழக்கிழமை தான் இந்த செடியின் வேர் உங்கள் வீட்டிற்குள் வர வேண்டும்.

nayuruvi

உங்கள் வீட்டின் அருகே இந்த செடி எங்கே இருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். அந்த செடியை பூமியிலிருந்து வேரோடு பிடுங்கி எடுத்து, கூர்மையான கல்லைக் கொண்டு தான் வேரை வெட்டி எடுக்கவேண்டும். இரும்பு கத்தரிக்கோல் கத்தி போன்ற பொருட்களை பயன்படுத்தி வேரை எடுக்கக்கூடாது.

- Advertisement -

செடியிலிருந்து உங்களால் எடுக்க முடியவில்லை என்றால், இந்த வேரை நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். அதுவும் வியாழக்கிழமை தான் வாங்க வேண்டும். வீட்டிற்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட இந்த வேரை கட்டாயம் மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, அதன் பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, நிழலிலேயே உலர வைத்து விட்டு, அதன் பின்பு பூஜை அறையில் வைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்ய வேண்டும்.

nayuruvi1

அடுத்தபடியாக ஒரு சிறிய மண் அகல் விளக்கை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இந்த நாயுருவி வேரை வைத்துவிட்டு அதன் மேலே கல் உப்பை கொட்டிவிட்டு, இதை உங்கள் நிலை வாசபல் படியில் வைத்துவிட வேண்டும். நிலை வாசல் படியில் மேல் பக்கம் எல்லாம் இதை வைக்கக்கூடாது. நில வாசலை ஒட்டியவாரு, இந்த மண் அகல் விளக்கை வாசலுக்கு வலது பக்கம் தரையில் வைத்துவிடுங்கள். வாசல்படியில் சிலபேருக்கு தரையில் தீபமேற்றும் பழக்கம் இருக்கும் அல்லவா? தீபம் ஏற்றும் அந்த இடத்தில் இந்த ஒரு மண் அகல் விளக்கு இருக்க வேண்டும்.

nayuruvi-1

வெள்ளிக்கிழமை மட்டும், வேரும் கல் உப்பும் கொண்ட, மண் விளக்கு நில வாசல் படிக்கு கீழ் பக்கத்தில் இருந்தால் போதும். அடுத்த நாள் ஒரு சிறிய மஞ்சள் துணியில் இந்த வேரையும் உப்பையும் கொட்டி முடிச்சுப்போட்டு நில வாசல் படியில், மேல் பக்கம் உள்ள ஆணியில் மாட்டி தொங்க விட்டு விடுங்கள்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் இந்த முடிச்சில் உள்ள பொருட்களை மாற்றி வைக்க வேண்டும். பழைய கல் உப்பை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். வேரை கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டுவிட வேண்டும். இதை செய்தால் நிச்சயமாக பணம் வீண் விரயம் ஆகாது. உங்கள் வீட்டிற்குள் இருக்கும் மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டாள், என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -