சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சேப்பங்கிழங்கு வறுவல் இப்படி ஒருமுறை மொறுமொறுவென்று செய்து பாருங்கள்! செம டேஸ்டா இருக்கும்.

seppankilangu-fry1
- Advertisement -

சேப்பங்கிழங்கு வருவல் குக்கரில் வேக வைத்து செய்வது அவ்வளவு சரியாக வருவதில்லை. அதனை வட சட்டியில் போட்டு அவித்தால் கொஞ்ச நேரத்தில் எளிதாக வெந்து விடும். அதன் பிறகு இப்படி மசாலாக்கள் போட்டு மொறுமொறுவென பொரித்து எடுத்து பாருங்கள், எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற கலவை சாதத்திற்கு இந்த மொறுமொறு சேப்பங்கிழங்கு வறுவல் செமையாக இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

seppankilangu

சேப்பங்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
சேப்பக்கிழங்கு – அரை கிலோ, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, சோம்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், கான்பிளவர் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

சேப்பங்கிழங்கு வறுவல் செய்முறை விளக்கம்:
முதலில் அரை கிலோ அளவிற்கு சேப்பங்கிழங்கை எடுத்து நன்கு தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு வட சட்டியில் போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். சேப்பங்கிழங்கை நீங்கள் குக்கரில் போட்டு எடுத்தால் சரியான பதம் உங்களுக்கு வராது. எனவே இப்படி வட சட்டியில் போட்டு கொதிக்க விட்டால் போதும் சுலபமாக வெந்துவிடும். முக்கால் பதம் வெந்த பிறகு அடுப்பை அணைத்து தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

seppankilangu-fry

பின்னர் தோலுரித்து வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் வெட்டிய துண்டுகளை கொதிக்கும் எண்ணெயில் போட்டு மொறுமொறுவென பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் தாளிக்க 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

- Advertisement -

கடுகு நன்கு பொரிந்து வந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் வறுத்த சேப்பங்கிழங்கு துண்டுகளை போட்டு அதன் மீது சோம்பை தூளாக நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். சேப்பங்கிழங்கு துண்டுகளை ஒரு முறை பிரட்டி எடுத்த பின்பு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

seppankilangu-fry2

பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, கான்பிளவர் மாவு ஆகியவற்றை சேர்த்து ஒரு பத்து நிமிடத்திற்கு இடைவிடாமல் லேசாக கரண்டி வைத்து பிரட்டிப் போட்டு கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் துண்டுகள் உடைந்து போக வாய்ப்புகள் உண்டு. பத்து நிமிடம் பிரட்டி எடுத்து பார்த்தால் மொறுமொறுவென்று நன்கு சிவக்க வெந்திருக்கும். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த சேப்பங்கிழங்கு வறுவல் இதே முறையில் நீங்களும் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -