செவ்வாய்க்கிழமை வாங்க கூடாத பொருட்கள்.

sevvai
- Advertisement -

வாரத்தில் ஏழு நாட்கள் இருக்கின்றன. இந்த ஏழு நாட்களில் ஏழு கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அந்த கிரகங்களுக்குரிய அதி தேவதைகளின் ஆதிக்கமும் நிறைந்திருக்கும். அதனால் தான் அந்த கிரகங்களால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதற்குரிய கிழமையில் பரிகாரமோ தானமோ செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் செவ்வாய்க்கிழமை அன்று வாங்கக்கூடாத பொருட்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

கிழமைக்குரிய கிரகங்களின் ஆதிக்கம் பெற்ற பொருட்களை நாம் வீட்டிற்கு வாங்கி வரும் பொழுது அதனால் நமக்கு நன்மைகள் ஏற்படும். அதே சமயம் அந்த கிரகங்களுக்கு பாதகமாக இருக்கக்கூடிய பொருட்களை வாங்கி வந்தால் நமக்கு பாதகமான பலன்களை ஏற்படும். இதை நாம் உணர்ந்து கொள்வதில்லை. ஆனால் அன்றைய காலத்தில் நம் முன்னோர்கள் அதை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட்டதால்தான் அவர்கள் குடும்பத்தில் நிம்மதியான மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று கண்டிப்பான முறையில் வாங்க வேண்டிய பொருட்கள் என்று பார்த்தால் அது துவரம் பருப்பு தான். மேலும் முருகப் பெருமானின் வழிபாட்டை மேற்கொள்வதால் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திலிருந்து நம்மால் வெளிவர முடியும் செவ்வாய் பகவான் நிலக்காரகன் என்று கூறப்படுவதால் இடம் விற்க வாங்க இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் கடன் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு செவ்வாய் பகவான் காரணமாக திகழ்கிறார் என்பதால் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் கோரையில் அசல் தொகையை திருப்பிக் கொடுத்தால் கடன் விரைவிலேயே அடையும் என்று கூறப்படுகிறது. செவ்வரளி மலர்களை முருகப்பெருமானுக்கு சாற்றி ஆறு தீபங்களை ஏற்றி வழிபடுவதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய பொதுவான காரியங்களைப் பற்றி பார்த்தோம். சரி இப்பொழுது செவ்வாய்க்கிழமை அன்று வாங்கக்கூடாத பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம். வாங்க கூடாத பொருட்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது மண் பாத்திரங்கள். எந்த கிழமையில் மண் பாத்திரங்கள் வாங்கினாலும் செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் மண் பாத்திரங்களை புதிதாக வாங்கி வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. மண் என்பது செவ்வாய் பகவானுக்குரியதுதான் என்றாலும் வீட்டிற்கு மண் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கினால் அதனால் வீட்டிற்குள் பிரச்சனைகளை ஏற்படும்.

அடுத்ததாக செவ்வாய்க்கிழமை அன்று வீடு பெருக்கும் விளக்கமாறு வாங்க கூடாது. அது மட்டும் அல்லாமல் சமையலுக்கு உபயோகப்படுத்தும் காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் இவற்றை வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்பது ஏற்பட்டு கொண்டே இருக்கும். மேலும் புளி, மிளகாய்த்தூள், சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா வகைகள் என்று எதையுமே செவ்வாய்க்கிழமை அன்று வாங்க கூடாது.

இதையும் படிக்கலாமே: வேலை தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேற பரிகாரம்.

மேல் சொன்ன பொருட்களை செவ்வாய்க்கிழமை அன்று வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகளும், பிரச்சனைகளும் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியும்.

- Advertisement -