செவ்வாழை சாப்பிட மட்டுமல்ல நம்ம முகத்தை பளிங்கு மாதிரி பளபளன்னு மாற்றவும் பயன்படுதாம்! சரும ஆரோக்கியத்திற்கு செவ்வாழை பேக் போடுவது எப்படி?

skin-sevvalai-palam
- Advertisement -

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். இதில் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு வலிமையை சேர்க்கிறது. மலட்டுத்தன்மை பிரச்சனை முதல் சிறுநீரகம், கல்லீரல் வரை அனைத்து விதமான முக்கிய பிரச்சனைகளில் இருந்து நமக்கு விடுதலை கொடுக்கக்கூடிய இந்த செவ்வாழை தினமும் சாப்பிடுவது நம் உடலுக்கு ஒரு வரப் பிரசாதமாகவே இருக்கும். அப்படிப்பட்ட இந்த செவ்வாழையில் இருக்கக்கூடிய சத்துக்கள் நம்முடைய சரும ஆரோக்கியத்திற்கும் உகுந்தவையாக இருக்கிறது. செவ்வாழை பேக் போடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? அதை எப்படி போடுவது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

செவ்வாழையில் இருக்கக் கூடிய விட்டமின் சி மற்றும் கரோட்டினாய்ட்ஸ் இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது சருமத்தை இயற்கையான முறையில் சுத்திகரித்து நல்ல ஒரு பாதுகாப்பை கொடுக்கிறது. சாதாரணமாக செவ்வாழையை குழைத்து முகத்தில் தடவி உலர விட்டு கழுவி வந்தாலே முகத்திற்கு ஈரப்பதம் கிடைத்து சருமம் பட்டுப் போல மிருதுவாகும்.

- Advertisement -

செவ்வாழை பழத்துடன் சிறிதளவு தேன் கலந்து பேஸ்ட் போல அரைத்து அதை முகம் முழுவதும் தடவி உலர விட்டு விட வேண்டும். நன்கு உலர்ந்து முகம் இறுக ஆரம்பித்ததும் குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்பி கொள்ளுங்கள். அவ்வளவுதான், முகம் பார்ப்பதற்கு பளிங்கு போல அவ்வளவு பிரமாதமாக மாறி இருக்கும். திடீரென வெளியில் செல்கிறோம், முகம் பளிச்சென பிரைட்டாக இருக்க என்னடா செய்வது? என்று யோசிக்க வேண்டாம். செவ்வாழை பழ துண்டுகளுடன் கொஞ்சம் அரிசி மாவை சேர்த்து நன்கு கைகளால் குழைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு முகத்தில் ஸ்கிரப் செய்வது போல நன்கு மசாஜ் செய்ய வேண்டும். முகம், கழுத்து போன்ற பகுதிகளிலும் இது போல மென்மையாக ஒரு பத்து நிமிடம் மட்டும் நன்கு மசாஜ் செய்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி ஒரு மெல்லிய டவல் கொண்டு ஒற்றி எடுத்தால் போதும் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், அழுக்குகள், தூசுகள் அனைத்தும் மாயமாய் மறைந்து முகம் பேசியல் செய்தது போல அவ்வளவு பிரைட்டாக இருக்கும்.

- Advertisement -

செவ்வாழை பேக் தினமும் போடுபவர்களுக்கு தங்களுடைய இளமையை எப்போதும் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய அற்புதமான சக்தியும் கிடைக்கும். செவ்வாழையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் அரை ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்கு பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் எல்லாம் நன்கு தடவி உலர்ந்து காயும் வரை காத்திருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
முடிவில்லா முடி வளர்ச்சியைப் பெற தலைமுடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தேயுங்க போதும். எவ்வளவு வழுக்கையான தலையிலும் கடகடன்னு முடி வளர தொடங்கிடும்.

ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு நன்கு உலர்ந்த பின்பு துடைத்து எடுத்து விடுங்கள். அவ்வளவுதான், நீங்கள் பேசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வாரம் இரண்டு முறை இந்த பேக் போட்டு வந்தால் போதும் இளமையும், சரும பாதுகாப்பும் நீண்ட காலத்திற்கு நமக்கு கிடைக்கும். ஆண், பெண் என்கிற எந்த பாகுபாடும் இன்றி குழந்தைகளுக்கு கூட இந்த எளிய பேக்கை நீங்கள் போடுவதால் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் பளிங்கு போல பளிச்சென இருக்கும்.

- Advertisement -