உங்களுடைய வீட்டில் எவ்வளவு தான் பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் பலன் இல்லையா? அதற்கு நீங்கள் செய்யும் இந்த 3 தவறுகளும் ஒரு காரணம்.

pray
- Advertisement -

சிலபேரது வீட்டில் சாமி கும்பிடவே மாட்டாங்க! ஆனா, அவங்களுக்கு சந்தோஷத்திற்கு ஒரு குறைவும் இருக்காது. சில பேரது வீட்டில் எப்போதும் இறைவழிபாட்டை செய்து கொண்டே இருப்பார்கள். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் கோவில்களுக்குச் செல்வது, தீபம் ஏற்றுவது, விரதம் இருப்பது இவ்வாறாக முழுமையான இறை பக்தியில் மூழ்கி இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய வீட்டில் சந்தோஷம் ஒரு துளி கூட இருக்காது. மன நிம்மதியும் இருக்காது. கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் முதல் காரணம் கர்மவினை.

pray

அவரவர் செய்த கர்ம வினையை இறைவழிபாடு செய்தாலும் சரி, இறைவழிபாடு செய்யவில்லை என்றாலும் சரி கட்டாயம் அனுபவத்தை தான் ஆகவேண்டும். நமக்கும் வரக்கூடிய கஷ்டத்தின் வேகம் கொஞ்சம் குறையும் இறை வழிபாடு செய்வதன் மூலம். அதற்காக கர்மவினையை மட்டுமே காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது. நம்பிக்கையான இறை வழிபாடு செய்தும், ஒரு வீட்டில் எவ்வளவுதான் பூஜை செய்தாலும், அந்த வீட்டில் தொடர் கஷ்டம் வந்து கொண்டே இருக்கின்றது என்றால் நாம் ஏதோ ஒரு விஷயத்தில் தவறு செய்கின்றோம் என்று தானே அர்த்தம். அது என்ன தவறு என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

முதலில் நம்முடைய வீடு இருட்டாகவே இருக்க கூடாது. நீங்கள் புதியதாக வீடு கட்டுவதாக இருந்தால், அந்த வீட்டை வெளி வெளிச்சம் உள்ளே வருவது போல கட்டிக்கொள்ளுங்கள். முடிந்தவரை அந்த வீட்டின் தரை கருப்பு நிறமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். டைல்ஸ், கிரானைட் கல் என்று பலவிதமான, புதுவிதமான தரைகள் இப்போது வந்திருந்தாலும் அதில் கருப்பு நிறத்தை தேர்ந்தெடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது. வீட்டிற்கு அது இருள் சூழ்ந்த நிலையை உண்டாக்கிவிடும்.

house

நிறையபேர் வீட்டில் கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இரண்டாவதாக உங்களுடைய வீட்டை வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் வெள்ளையடித்து சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சுவரில் வெடிப்பு இருந்தால் தான் வீட்டில் பிரச்சனை வரும் என்பது அர்த்தம் கிடையாது. அசுத்தமான சுவரின் மூலமாகவும் வீட்டில் கஷ்டம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் தைத்திருநாள் அன்று வீட்டை வெள்ளை அடித்து சுத்தமாக வைத்துக் கொண்டதற்கு காரணம் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

- Advertisement -

மூன்றாவதாக நம்மில் பலபேர் செய்யும் தவறு படுக்கை அறையில் கட்டில் மேல் அமர்ந்து உணவு அருந்துவது. நிச்சயம் அது வீட்டிற்கு கஷ்டத்தை தான் தேடித்தரும். சாப்பாட்டுக்கு மரியாதை கொடுத்து, எந்த இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டுமோ, அந்த இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது தான் நல்லது. உங்கள் வீட்டு வரவேற்பறையில் கட்டில் இருந்தாலும் கூட, அதன் மேல் அமர்ந்து சாப்பிடுவது அவ்வளவு நல்லது கிடையாது. இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

eating-1

உங்களுடைய நில வாசல் கதவாக இருந்தாலும் சரி, படுக்கை அறை கதவாக இருந்தாலும் சரி, அந்த கதவு பழுதடைந்து இருக்கக்கூடாது. மூடவும் திறக்கவும் சிரமமாக இருக்கக்கூடாது. கதவுகளில் இருக்கும் தாழ்ப்பால் சரியாக வேலை செய்யாமல் இருக்கக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறாக உங்களுடைய வீட்டில் நீங்கள் ஏற்படுத்துக்கூடிய இந்த சின்ன சின்ன மாற்றங்கள் பல விதமான பெரிய நன்மைகளை உங்களுக்கு தேடித்தரும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இதையும் படிக்கலாமே
இரவில் செய்யவே கூடாத முக்கியமான 3 விஷயங்கள்? இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் பணம் விரையமாகி கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -