ஸ்ட்ரெய்டனிங் செய்தது போல முடி நேராகவும், பளபளப்பாகவும் அலைபாய 4 வெண்டைக்காய் இருந்தால் போதுமே! எதுக்கு ஆயிரம் ஆயிரமா செலவு பண்றீங்க?

hair2
- Advertisement -

கெரட்டின் என்னும் புரத பொருள் கூந்தலை நேராகவும், மிருதுவான தன்மையுடனும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளக்கூடிய அற்புதமான மூலக்கூறாக இருக்கிறது. இன்றைய நவீன பெண்களுக்கு ஸ்ட்ரெய்ட்னிங் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை நிச்சயம் எல்லோருக்கும் உண்டு. சினிமாவில் காட்டுவது போல ஹீரோயின்களுக்கு இருக்கும் ஸ்ட்ரைட்னிங் செய்த நேரான முடி, வீட்டிலேயே நமக்கு கிடைக்க என்ன செய்யலாம்? இதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

எல்லோருக்குமே நேரான வழவழப்பு தன்மையுடன் இருக்கக்கூடிய முடி அமைவது கிடையாது. அதற்கான பராமரிப்பு செய்யும் பொழுது முடியானது நேராகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் நன்கு அலைபாயத் துவங்கும். அலைபாயும் கூந்தலை பெறுவதற்கு விரும்பும் பெண்கள் அதிக அளவில் ஆயிரம் ஆயிரமாக கொட்டிக் கொடுத்து கெரட்டின் தெரபி செய்து கொள்கிறார்கள். இப்படி இயற்கை முறையில் ஒருமுறை நீங்கள் கெரட்டின் தெரபி எனப்படும் இந்த கூந்தலை பராமரிக்கும் முறையை செய்து பாருங்கள், உங்களுடைய முடியும் பத்து பைசா செலவில்லாமல் ஸ்ட்ரெய்டனிங் செய்தது போல நீண்ட நேர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலை அடைய முடியும்.

- Advertisement -

இதற்கு வீட்டில் இருக்கும் வெண்டைக்காய் மட்டுமே போதுமானது. சுத்தமான நன்கு முற்றாத மற்றும் பிஞ்சு காயாக இல்லாத மிதமான வெண்டைக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நான்கு வெண்டைக்காய் இருந்தால் போதும்! அதை காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி விட்டு சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்தது ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இந்த நறுக்கிய வெண்டைக்காய் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

வெண்டைக்காய் கொதித்து சுண்டியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். வெண்டைக்காய் தண்ணீரில் நன்கு ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெண்டைக்காய் ஜெல்லை தலை முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் அப்படியே ஊற வைத்து பின்னர் தலைக்கு அலசி பாருங்கள், கெரட்டின் ட்ரீட்மென்ட் கொடுத்தது போல உங்களுடைய தலைமுடியும் பளபளப்பு பெற்று, கண்டிஷனிங் செய்தது போல அலைபாயத் துவங்கும்.

- Advertisement -

வெண்டைக்காயில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தலைமுடியின் சீரான வளர்ச்சிக்கு நமக்கு உந்துகோலாக இருக்கும். மேலும் அதில் இருக்கும் பொட்டாசியம், ஜின்க், தயமின், ஃபோலேட் ஆகியவையும் கூந்தல் உடைய மிருதுவான தன்மைக்கும், சிக்குகள் இல்லாமல் கண்டிஷனர் செய்வது போன்ற சைனிங் கொடுக்கக்கூடிய ஆற்றலும் உண்டு. இந்த வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள் மூளை வளர்ச்சியை மட்டும் அல்ல, தலைமுடியின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கக் கூடியது.

இதையும் படிக்கலாமே:
ராக்கெட் வேகத்தில் முடியை வளர செய்யும் வெந்தயம். தாறுமாறான முடி வளர்ச்சியை பார்த்து மிரண்டு போயிடுவீங்க.

எனவே தலை முடிக்கு வாரம் ஒரு முறையாவது இந்த வெண்டைக்காய் பேக் போட்டு பாருங்கள், உங்களுடைய தலைமுடி பட்டுப் போல அலைபாய துவங்கும். இதற்காக நாம் பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வெண்டைக்காயை விட நல்ல கெரட்டின் ட்ரீட்மெண்ட் எதுவுமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு வளவளப்பு தன்மை இதில் நிறையவே உள்ளன. இதில் இருக்கும் சத்துக்களும், அந்த வழவழப்பு தன்மையும் சேர்ந்து நம்முடைய கூந்தலை கண்டிஷனிங் செய்து ஸ்ட்ரைட்னிங் செய்தது போன்ற நீண்ட மற்றும் நேர்த்தியான கூந்தலை கொடுக்கும். இதை வாராவாரம் தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி சார்ந்த பிரச்சினைகளும் தீரும்.

- Advertisement -