சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

ஜாதகத்தில் ஏற்படுகின்ற தோஷங்களில் சனி தோஷம் என்பது ஒரு நபருக்கு, அவரது வாழ்க்கையில் மிகவும் பாதகமான பலன்களை ஏற்படுத்த கூடும் என கருதப்படுகிறது. நவகிரகங்களில் சனி பகவானின் மணங்குளிரச் செய்து, சனி கிரக தோஷம் நீங்க செய்ய வேண்டிய சனிதோஷ பரிகாரங்கள் என்ன என்பது இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற சனி தோஷம் காரணமாக, அவருக்கு வாழ்க்கையில் கெடு பலன்கள் ஏற்படாமலிருக்க ஏதேனும் ஒரு தேய்பிறை சனிக்கிழமை தினத்தில் திருநள்ளாறு அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்று சிவபெருமானையும், அம்பாளியும் வழிபட வேண்டும். பிறகு அங்கு தனி சன்னதியில் இருக்கின்ற சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் ஜாதகத்தில் சனி தோஷம் ஏற்பட்டிருந்தாலும் வாழ்க்கையில் பாதகமான பலன்கள் அதிகம் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -

சனி தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள், அந்த தோஷத்திலிருந்து விடுபடுவதற்குரிய சிறந்த வழியாக இருப்பது ஆஞ்சநேயர் வழிபாடு தான். தினந்தோறும் ஆஞ்சநேயர் மந்திரம் துதித்து வழிபாடு செய்து வந்தாலே சனி தோஷங்கள் குறையும். மேலும் சனிக்கிழமைகளில் அருகில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்று கோயிலில் அமர்ந்து அனுமன் சாலிசா துதித்து வந்தாலும், ஜாதகத்தில் சனி கிரக தோஷங்கள் குறைவதற்கு சிறந்த ஆன்மீகப் பரிமாரகமாக உள்ளது.

ஜாதகத்தில் கடுமையான சனி தோஷம் இருக்கும் பட்சத்தில், அந்த ஜாதகர் சனிக்கிழமை விரதம் மேற்கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் சனிக்கிழமை தோறும் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அரிசி, கருப்பு உளுந்து அல்லது கருப்பு எள் கலந்து செய்யப்பட்ட கிச்சடி உணவை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை 51 சனிக்கிழமைகள் செய்ய வேண்டும்.

- Advertisement -

சனி கிரக தோஷத்தால் ஒருவரது வாழ்க்கையில் பாதகங்கள் உண்டாகாமல், நன்மைகள் ஏற்பட கருப்பு நிறத்தில் இருக்கின்ற டூர்மலின் என்கிற ஒருவகை நவரத்தின கல்லை வெள்ளியில் பதித்து மோதிரமாக உங்களின் வலது கை நடுவிரலில் அணிந்து கொள்வதால் சனிபகவானின் அருட்கடாட்சம் கிடைத்து நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: சூரிய தோஷ பரிகாரம்

சனிக்கிழமைகள் தோறும் காகங்களுக்கு கருப்பு எள் கலந்த தயிர் சாதத்தை உணவாக வைக்க வேண்டும். தெய்வங்களில் பைரவர் சனி பகவானின் குரு என்பதால் அவரின் வாகனமாக இருக்கும் நாய்களுக்கு குறிப்பாக கருப்பு நிற நாய்களுக்கு பிஸ்கட், புரை போன்றவற்றை உணவாக இட்டு வருவதாலும் சனி தோஷம் குறைந்து நற்பலன்கள் அதிகம் ஏற்படும்.

- Advertisement -